நான் விளையாடிய காலத்தில் இவர்கள் 3 பேர்தான் பிட்னஸ்ஸில் சிறந்து விளங்கினார்கள் – இர்பான் பதான் ஓபன் டாக்

Irfan
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணியில் பிட்னஸ்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் யோயோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அணியில் இடம் என்ற விதிமுறையும் உள்ளது.

fitness

- Advertisement -

இந்த ஃபிட்னஸ் பயணம் தோனி கேப்டனாக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கோலி கேப்டனாக பிறகு சற்று கூடுதலாக இதற்கு கவனம் கொடுக்கப்பட்டது. ஆனால் சச்சின், கங்குலி, டிராவிட், யுவராஜ் சிங், கைப், இர்பான் பதான் மற்றும் ஜாகிர் கான் ஆகியோர் ஆடிய காலகட்டங்களில் இதுபோன்ற யோ யோ டெஸ்ட் எல்லாம் கிடையாது.

ஆனாலும் வீரர்கள் நல்ல பிட்னஸ் உடன் தான் இருந்தார்கள். ஆனால் இப்போது இருக்கும் உலகத்தரம் வாய்ந்த பிட்னஸ் வீரர்கள் அப்போது கிடையாது. இருந்தாலும் சமகாலத்தில் ஃபிட்னஸ் என்பது இப்போது எவ்வளவு முக்கியம் என்பது வீரர்களுக்கு புரிந்துள்ளது. அதேபோல எவ்வளவு பெரிய திறமையானவர்களாக இருந்தாலும் பிட்னஸ் இருந்தால் மட்டுமே அணியில் வாய்ப்பு அளிக்க முடியும் என்ற விதி உள்ளது.

இதற்கு உதாரணமாக யுவராஜ் சிங்கை யோயோ டெஸ்டில் தோல்வி அடைந்ததை காட்டி இந்திய அணி வெளியேற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தான் ஆடிய காலகட்டத்தில் சிறந்த பிட்னஸ் உடன் திகழ்ந்த டாப் 3 வீரர்கள் யார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் இணையத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியதாவது : அதில் தனது பெயரையும் சேர்த்துக் கொண்டவர் தன்னைத்தவிர சச்சின் டெண்டுல்கர் மற்றும் முகமது கைஃப் ஆகிய இருவரும் சிறந்த பிட்னஸ் உடன் அணியில் திகழ்ந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பேட்டிக்கு ரசிகர்கள் தங்களது விமர்சையான கருத்துக்களையும் அளித்து வருகின்றார்கள்.

மேலும் சச்சின் ஓய்வு அறிவிக்கும் வரை அவரது பேட்டியைங்கும் சரி, அவருடைய ரன்னிங்கும் சரி சிறப்பாக இருந்தால் எப்போதும் தனது பேவரிரைட் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement