பேட்டிங்கில் அதிக ரன்கள் அடித்தாலும் சென்னை அணி தோற்க அவர்களிடம் இருக்கும் இந்த குறையே காரணம் – இர்பான் பதான்

pathan 1

நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட பாதி சுற்று முடிவடைந்துள்ள நிலையில் டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சென்னை அணியும், மூன்றாவது இடத்தில் பெங்களூர் அணியும், நான்காவது இடத்தில் மும்பை அணியும் இருக்கின்றன.
கடந்த சனிக்கிழமை இரவு சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. நடந்து முடிந்த அனைத்துப் போட்டிகளிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி அதுதான். எதிர்பார்த்ததைப் போலவே ஆரம்பம் முதல் இறுதிவரை அந்த போட்டி அனல் பறக்க நடந்தது. போட்டியின் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இறுதியில் வெற்றி பெற்றது.

அந்த போட்டி குறித்து சமீபத்தில் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் ஒரு சில கருத்துக்களை கூறியிருக்கிறார். இன்றைய போட்டியில் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் மிக அற்புதமாக விளையாடினார்கள். அதன் காரணமாகவே முதல் பாதியில் சென்னை அணியால் 20 ஓவரில் 218 ரன்கள் குவிக்க முடிந்தது. ஆனால் பிற்பாதியில் என்னதான் மும்பை அணி பேட்ஸ்மேன்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் அன்றைய போட்டியில் சென்னை அணியின் பவுலிங் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அதன் காரணமாகவே அன்றைய போட்டியில் சென்னை அணி இறுதி வரை சென்று தோல்வியுற்றது.

மேலும் பேசிய இர்பான் பதான் டெல்லி அணியில் ரபாடா, மும்பை அணியில் பும்ரா மற்றும் பெங்களூரு அணியில் முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பாக யார்க்கர் பந்துகளை வீசுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு வீரர் சென்னை அணியிடம் தரப்போவது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

sam curran

சி.எஸ்.கே அணியில் இளம் வீரர் சாம் கரண் அவ்வப்போது யார்க்கர் பந்துகளை வீசினாலும் அவரால் தொடர்ந்து வீசுமுடியவில்லை. ஒரு அணியின் வெற்றி இறுதி ஓவர்களில் அதிக அளவில் தீர்மானிக்கப்படும். குறிப்பாக இறுதி ஓவர்களில் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி எதிரணியை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

- Advertisement -

அப்படி யாரக்கர் பந்துகளை போட்டு எதிரணியை கட்டுப்படுத்த கூடிய ஒரு பவுலர் சென்னை அணி இடம் தற்போது இல்லை. எனவே சென்னை அணி நிர்வாகம், இதற்கு தகுந்தார்போல் ஒரு நல்ல பவுலரை தேர்வு செய்து இனி வரும் போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும் என்று இர்பான் பதான் வலியுறுத்தியுள்ளார்.