பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இதன்காரணமாக தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணி (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா ஜெயிக்கனும்னா அவரோட விக்கெட் முக்கியம் : இர்பான் பதான்
அதனைத்தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக நாளை ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெறயிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்கிற முனைப்புடன் தற்போது இங்கிலாந்து அணியின் வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளையில் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்று தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக இந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது ஆலோசனைகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதானும் தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது :
இந்த டெஸ்ட் தொடரில் ஆபத்தான இங்கிலாந்து வீரர் என்றால் அது பென் டக்கெட் தான். ஏற்கனவே அவர் இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போதே 500-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்திருந்தார். இந்த தொடரின் முதல் போட்டியிலும் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த அவர் இரண்டாவது இன்னிங்சில் சதமும் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். எனவே இந்த தொடரில் அவரே இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக இருப்பார்.
இதையும் படிங்க : பும்ரா ரெஸ்ட் எடுத்தா ஷமி மாதிரி திறமை கொண்ட அவரை இந்தியா விளையாட வைக்கனும்.. இர்பான் பதான் பேட்டி
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான பும்ரா மற்றும் ஜடேஜா பந்துவீச்சை கூட அவர் எளிதாக விளையாடுகிறார். எனவே இந்திய வெற்றி பெறவேண்டுமெனில் அவரது விக்கெட்டை விரைவாக வீழ்த்த வேண்டும். அதிலும் குறிப்பாக அவருக்கு எதிராக புல் லென்த் பந்துகளை வீசி அவரை ட்ரைவ் ஆட வைக்கவேண்டும். அப்படி செய்தால் தான் அவர் எட்ஜ்ஜாகி அவரது விக்கெட்டை இழப்பார் என இர்பான் பதான் பேசியது குறிப்பிடத்தக்கது.



