பும்ரா ரெஸ்ட் எடுத்தா ஷமி மாதிரி திறமை கொண்ட அவரை இந்தியா விளையாட வைக்கனும்.. இர்பான் பதான் பேட்டி

Irfan Pathan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து ஜூலை இரண்டாம் தேதி துவங்கும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது.

ஆனால் அப்போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக விளையாட மாட்டார் என்று செய்திகள் காணப்படுகின்றன. ஒருவேளை பும்ரா விலகினால் இந்தியா வெற்றி பெறுவது சாத்தியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் முதல் போட்டியிலேயே அவரைத் தவிர்த்து மற்ற பவுலர்கள் சுமாராக பவுலிங் செய்தது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது.

- Advertisement -

அர்ஷ்தீப் வேண்டாம்:

ஒருவேளை பும்ரா விலகினால் அவருக்கு பதிலாக விளையாடப் போவது யார் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அது போன்ற சூழ்நிலையில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இங்கிலாந்தில் ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுக்கும் திறமை உடையவர். எனவே அவரை விளையாட வைக்கலாம் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா ஓய்வெடுக்கும் போட்டியில் ஆகாஷ் தீப்பை விளையாட வைக்கலாம் என்று முன்னாள் இந்திய பவுலர் இர்பான் பதான் கூறியுள்ளார். ஏனெனில் ஷமியை போல சீம் பகுதியை நேராக வைத்து வீசும் திறமை அவரிடம் இருப்பதாகவும் பதான் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடவில்லை என்றால் யார் அவருக்கு பதிலாக இந்திய அணியில் விளையாட வேண்டும்?”

- Advertisement -

பதான் கோரிக்கை:

“அது போன்ற சூழ்நிலையில் வலைப்பயிற்சியில் நல்ல ரிதத்தில் இருக்கும் ஆகாஷ் தீப் விளையாட வேண்டும். அவர் ஷமியைப் போன்ற அச்சைக் கொண்ட பவுலர் என்று நான் கருதுகிறேன். அவருடைய நேரான சீம் பந்துகள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை குறிப்பாக தாமதமான மூவ்மெண்ட் இருக்கும் போது திணறடிக்கும். ஆக்ரோசமாக விளையாடச் செல்லும் போது பிரச்சனை ஏற்படலாம்”

இதையும் படிங்க: 371 இல்ல 500 ரன்ஸ் டார்கெட் வெச்சாலும் இந்தியாவை அடிப்போம்.. காரணம் இது தான்.. ஹரி ப்ரூக் பேட்டி

“தற்சமயத்தில் நாம் அர்ஷ்தீப் சிங்கை விளையாட வைக்க நினைக்கலாம். ஆனால் பும்ரா இல்லாத போது ஆகாஷ் தீப் அவருடைய இடத்தில் விளையாட வேண்டும்” என்று கூறினார். கடந்த 2024 வங்கதேச தொடரில் அறிமுகமான ஆகாஷ் தீப் சிறப்பாக பவுலிங் செய்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். இருப்பினும் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement