இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோன்றது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 5 சதங்களை அடித்த இந்தியா வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யத் தவறியது. அதனால் 371 ரன்கள் மட்டுமே நிர்ணயித்த இந்தியா போராடி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய பவுலர்கள் கடைசி நாளில் மிகவும் சுமாராக பவுலிங் செய்தார்கள். அதைப் பயன்படுத்தி 188 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இங்கிலாந்து எளிதாக இலக்கைத் தொட்டு வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 2வது போட்டி ஜூலை இரண்டாம் தேதி எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இரண்டாவது போட்டி மதியம் 3.30 மணிக்குத் துவங்குகிறது.
371 ரன்ஸ் மட்டுமல்ல:
கடைசியாக 2022ஆம் ஆண்டு அதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 378 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இங்கிலாந்து அடித்து நொறுக்கி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக வந்தது முதல் பஸ்பால் என்ற பெயரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து சொந்த மண்ணில் 300க்கும் மேற்பட்ட ரன்களை எளிதாக சேசிங் செய்து வருகிறது.
அதன் காரணமாக எஞ்சிய தொடரில் இந்தியா 450 – 500 ரன்களை இலக்காக நிர்ணயித்தாலும் அதை எளிதாக அடிப்போம் என்று இங்கிலாந்து வீரர் ஹரி ப்ரூக் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் நாங்கள் அமைதியாக இருந்தோம். ஏனெனில் எந்த இலக்கை நிர்ணயித்தாலும் அதை நாங்கள் சேசிங் செய்ய முயற்சிக்கப் போகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்”
500 ரன்களையும் அடிப்போம்:
“3வது இன்னிங்ஸில் இந்தியாவின் 6 விக்கெட்டுகளை வேகமாக எடுத்தது எங்களை இன்னும் அமைதிப்படுத்தியது. ஏனெனில் இதற்கு முன் நாங்கள் 500 ரன்களை சேசிங் செய்யத் துவங்கியுள்ளோம். பென் டக்கெட் – ஜாக் கிராவ்லி எங்களுக்கான அற்புதமான துவக்கத்தைக் கொடுத்தார்கள். எங்களுக்கு எந்த இலக்கை நிர்ணயித்தாலும் அதை நாங்கள் சேசிங் செய்ய முயற்சிப்போம் என்பதை அனைவரும் அறிவார்கள்”
இதையும் படிங்க: அதுக்கு பயந்து இந்தியா ஜஸ்ப்ரித் பும்ராவை 2, 3வது டெஸ்டில் விளையாட வைப்பாங்க.. மார்க் வுட் பேட்டி
“எனவே யாருக்கு தெரியும், 450 என்பது மிகப்பெரிய இலக்கு. ஆனால் அதையும் அடிப்பதற்கு நாங்கள் எங்களுடைய சிறந்த முயற்சிகளை கொடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார். அந்த வகையில் எந்த இலக்கையும் அடித்து நொறுக்க தயாராக இருக்கும் இங்கிலாந்தை இத்தொடரில் இளம் இந்திய அணி தோற்கடிப்பது கடினமானதாகவே பார்க்கப்படுகிறது.



