என்ன தம்பி இப்படி ஆடுறீங்க. நீங்க ஒரு நல்ல ஆல்ரவுண்டர்ன்னு நெனச்சி ஆடுங்க – மும்பை வீரரை கடிந்த இர்பான் பதான்

Irfan-pathan
- Advertisement -

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த இரண்டு முறையும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு அந்த அணியை வீழ்த்த மற்ற அணிகள் கடுமையாக போராடியதை நாம் பார்த்தோம். ஆனால் அதற்கு தலைகீழாக இந்த முறை ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததிலிருந்து மும்பை அணி ஸ்கோர் செய்ய கடுமையாக போராடி வருகிறது. மேலும் நான்கு போட்டிகளின் முடிவில் இதுவரை இரண்டு வெற்றி மற்றும் இரண்டு தோல்வியுடன் பின்தங்கியுள்ள மும்பை அணி மீது பலருக்கும் அதிர்ப்தி இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக மும்பை அணி குறித்து பல்வேறு வீரர்களும் தற்போது விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த தொடர் ஆரம்பித்ததிலிருந்து மும்பை அணியில் வீரர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. அதிலும் குறிப்பாக ஹார்டிக் பாண்டியாவின் மோசமான பேட்டிங் மும்பை அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த தொடர் முழுவதுமே பந்து வீசாமல் இருக்கும் ஹர்டிக் பாண்டியா பேட்டிங்கில் சொதப்பிய வருவதால் அவர் மீது பெரிய அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதுவரை அவர் விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் சேர்த்து வெறும் 35 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். முதுகுவலி மற்றும் பணிச்சுமை காரணமாக பந்து வீசாமல் இருக்கும் பாண்டியா பேட்டிங்கிலும் சோடை போய் உள்ளதால் அவர் மீது ரசிகர்களுக்கும் சற்று வருத்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடைசியாக நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே தேவையில்லாமல் பந்தினை தூக்கி அடித்து ஆட்டம் இழந்து வெளியேறிய அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

pandya

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில் : ஹார்டிக் பாண்டியா தற்போது பௌலிங் போடுவது இல்லை. பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவதில்லை. இது மும்பை அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அவர் இந்திய அணியில் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் அதனை நினைத்து கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என காட்டமாக தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

pandya 1

அதே வேளையில் பாண்டியாவின் மோசமான பேட்டிங்கிற்கு மைதானத்தின் தன்மையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளும் சென்னை மைதானத்தில் நடைபெற்றது. இது பேட்டிங் செய்ய மிக கடினமான ஆடுகளம் என்பதால் 5வது 6வது வீரராக களமிறங்கும் பாண்டியா எவ்வாறு அடிக்க முடியும் என்ற சப்போர்ட்டும் அவருக்கு கிடைத்து வருகிறது. வேறு மைதானத்திற்கு செல்லும்போது அவரது அதிரடியை பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement