பெங்களூரு அணிக்கு வெளிநாட்டு வீரர்களை விட தமிழக வீரரான இவர் கீ பிளேயராக இருப்பார் – இர்பான் பதான் கணிப்பு

pathan 1
- Advertisement -

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை 14-வது ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்தியா முழுவதும் ஆறு மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறுவதால் ரசிகர்களிடையே இந்த தொடர்பு பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்த கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ipl trophy

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் செயல்பாடு குறித்து முக்கிய கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கருத்தில் :

ஆர்சிபி ரசிகர்கள் தற்போது என்ன நினைக்கிறார்கள் என்றால் டிவில்லியர்ஸ் மேக்ஸ்வெல் மற்றும் அதிரடி ஆல்ரவுண்டர் இருப்பது அவர்களது பலமாக கருதுகிறார்கள். ஆனால் மிடில் ஓவர்களில் ஸ்பின் பவுலர்களை எதிர்கொள்ளும் சிறப்பான வீரர் என்று தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரை கூறியிருக்கிறார்.

ஏனெனில் அவர்களை விட நடுத்தர ஓவர்களில் சிறப்பாக விளையாடி சுந்தரரால் ரன்களை சேர்க்க முடியும் என்று அவர் அந்தக் கருத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வருடம் ஆர்சிபி அணியில் கீ பிளேயராக அவர் நிச்சயம் இருப்பார் என்று இர்பான் பதான் தனது கருத்தினை அளித்துள்ளார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sundar-2

கடந்த சில ஆண்டுகளாக பவர்பிளே ஓவர்களில் பந்து வீசி வரும் சுந்தர் சிறப்பாக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். ஆனால் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்க வில்லை. தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் நிச்சயம் இம்முறை பெங்களூர் அணியில் அவர் பேட்டிங்கில் ஆர்டரில் சற்று முன்னேறி விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement