நான் 27 வயதிலேயே இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட இவரே காரணம் – வருத்தத்துடன் பேசிய இர்பான் பதான்

irfan
- Advertisement -

இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக 2003ஆம் ஆண்டு தனது பதினெட்டு வயதில் அணியில் இடம் பிடித்தவர் இர்பான் பதான். வேகப்பந்து வீச்சு மட்டும் இன்றி பேட்டிங்கிலும் கவனம் செலுத்திய இர்பான் பதான் கபில் தேவுக்கு அடுத்து சிறப்பான ஆல்-ரவுண்டராக அணியில் நீடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த அளவிற்கு அவரது ஆட்டத்திறனும் சிறப்பாக இருந்தது ஆனால் கடைசியாக 2013ம் ஆண்டுக்கு பிறகு அவர் தனது 27 வயதிலேயே கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தவிர்க்கப்பட்டார்.

Pathan 1

- Advertisement -

மேலும் தொடர்ந்து அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டதால் கடைசியாக கடந்த வருடம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் அறிமுகமான இர்பான் பதான் புது பந்தை ஸ்விங் செய்யும் திறமையை பெற்றிருந்ததால் இளம் வயதிலேயே அதிக அளவு புகழ்பெறத் தொடங்கினார். ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அவருக்கு காயம் காரணமாக தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அவ்வப்போது இந்திய அணிக்கு வருவதும் செல்வதும் ஆக இருந்த இர்பான் பதான் 28 வயதிலேயே அணியில் இருந்து முற்றிலும் ஓரங்கட்டப்பட்டார். மேலும் இந்திய அணிக்கு விளையாடிக் கொண்டிருக்கும்போது ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழுவில் அவர் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் தான் எதற்காக அணியிலிருந்து ஒதுக்கப்பட்ட என்ற கருத்தை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Pathan-3

இதுகுறித்து கூறுகையில் : இந்திய அணியில் நாம் இருப்பதற்கு ஆதரவு என்பது தேவையில்லை நமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு கண்டிப்பாக கிடைத்தே தீரும் என்று சிலர் கூறுவார்கள் ஆனால் ஏராளமான ஆதரவு எனக்கு கிடைத்தும் அணியில் இடம் கிடைக்காதது குறித்து எல்லோரும் ஒரு கருத்தினை கூறுகிறார்கள். ஆனால் என்னுடைய தகுதிக்கு உண்டான எல்லாவற்றையும் நான் பெற்றேன்.

- Advertisement -

கடைசியாக 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் விளையாடினேன். அந்த போட்டியில் நான் ஆட்டநாயகன் விருது பெற்றாலும் அதன் பிறகு என்னால் எனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் இன்றுவரை எனக்குத் தெரியவில்லை நான் விளையாடிய காலத்தை திரும்பிப் பார்க்கும்போது நான் ஏராளமான சாதனைகளை படைத்து உள்ளதாக நினைக்கிறேன்.

கடைசி போட்டியை ஏன் 27 வயதில் முடித்தீர்கள் என்றால் 35 வயதில் நான் படைத்திருக்க வேண்டிய சாதனையை 27 வயதிலேயே படைத்ததாக நினைக்கிறேன். மேலும் தேர்வாளர்கள் என்னை நீக்குவது குறித்து ஏதும் கூறவில்லை. அப்போது தேர்வுக்குழுவில் இருந்த தமிழக முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த் கூறியதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். இர்பான் பதான் விக்கெட்டுகளை வீழ்த்த வில்லை.

SRIKKANTH

பேட்ஸ்மேன்கள் தான் அவர்களது விக்கெட்டுகளை அவருக்கு விட்டு கொடுக்கிறார்கள் என்றார் அவர் எதன் அடிப்படையில் இவ்வாறு கூறினார் என்பது எனக்கு புரியவில்லை. வீரர்களை தேர்வு செய்வதற்கான காரணத்தை சரியாக கூற வேண்டும். அவர் அப்போது கூறிய கருத்து கேலிக்கூத்தானது. தேர்வாளர்கள் மற்றும் வீரர்களுக்கும் இடையே நல்ல கம்யூனிகேஷன் தேவை அது எனக்கு எது என்று தெரியவில்லை என்று வருத்தத்துடன் இர்பான் பதான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

Advertisement