இந்தவொரு விடயம் போதும்.. ஹார்டிக் பாண்டியாவுக்கு மாற்றுவீரர் நிதீஷ் ரெட்டி தான் – இர்பான் பதான் கருத்து

Irfan Pathan
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நேற்று நடைபெற்ற கடைசி போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மைக்கல் பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து அணியானது இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்திய மண்ணில் இதுவரை ஒருநாள் தொடரை கைப்பற்றாமல் இருந்த நியூசிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை நிகழ்த்தியுள்ளது.

ஹார்டிக் பாண்டியாவுக்கு சரியான மாற்றுவீரர் நிதீஷ் ரெட்டி தான் : இர்பான் பதான்

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரின் போது இந்திய அணியின் மித வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இடம் பிடித்திருந்த நிதீஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்று விளையாடியிருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இரண்டாவது போட்டியில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தாத அவர் மூன்றாவது போட்டியான போட்டியின் போது பேட்டிங்கில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதலாவது அரைசதத்தை பதிவு செய்தார். அதோடு மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்திலும் பந்து வீசி அசத்தியிருந்தார்.

அதன் காரணமாக ஹார்டிக் பாண்டியாவிற்கு சரியான மாற்றுவீரர் நிதீஷ் ரெட்டி தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நேற்று நடைபெற்ற போட்டியில் நிதீஷ் ரெட்டி விளையாடிய பேட்டிங்கும், அவர் பந்துவீசிய விதத்தையும் வைத்து பார்க்கும் போது அவர் ஒரு நல்ல ஆல்ரவுண்டராக வருவதற்கு அனைத்து வாய்ப்புமே இருக்கிறது.

- Advertisement -

பேட்டிங்கில் விராட் கோலியுடன் சேர்ந்து மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் அதிரடியாக விளையாடுவது மட்டுமின்றி ஸ்ட்ரைக் ரொட்டேட்டும் செய்கிறார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் 135 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறார். இதன் காரணமாக ஹார்டிக் பாண்டியாவின் சரியான மாற்றுவீரர் நிதீஷ் ரெட்டிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : இந்தியாவை அடிச்சது போதும் போங்க.. மிட்சேலை கலாய்த்து பாராட்டிய விராட் கோலி நெகிழ்ச்சியான அன்பு பரிசு

ஒரு சில போட்டிகளில் அவர் சோபிக்க தவறினாலும் நிர்வாகம் அவருக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும். அப்படி ஒரு ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் அவர் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக நிதீஷ் ரெட்டி பெரிய இடத்தை தொடுவார் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement