- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த விடயத்தை நோட் பண்ணீங்களா? உடனடியா சுப்மன் கில் மீது நடவடிக்கை எடுங்க – இர்பான் பதான் கருத்து

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அண்மையில் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் காரணமாக இந்திய அணி தோல்வியை சந்தித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய சுப்மன் கில் 10 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

சுப்மன் கில் விடயத்தில் நிர்வாகம் தான் முடிவு எடுக்கனும் : இர்பான் பதான்

டெஸ்ட் அணியின் கேப்டனாக மாறிய பிறகு உடனடியாக டி20 அணிக்குள் துணை கேப்டன் பதவியோடு துவக்க வீரராகவும் அவரை இந்திய அணியின் நிர்வாகம் ப்ரமோஷன் கொடுத்து அழைத்து வந்தது. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடாததால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் வலுத்து வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதானும் சுப்மன் கில்லின் இந்த நிலையற்ற ஆட்டம் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சுப்மன் கில் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக ரன்களை சேர்க்க வேண்டும். அது அவரது துவக்க வீரருக்கான இடத்திற்கு மிகவும் முக்கியம்.

ஏனென்றால் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் துவக்க வீரருக்கான இடத்திற்கு போட்டியில் காத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் நிலையான இடத்தை பிடித்துள்ள வேளையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வாய்ப்புக்காகவும் தொடர்ந்து பொறுமையுடன் காத்திருக்கிறார்.

- Advertisement -

ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்கக்கூடிய வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் ஜெய்ஸ்வால் டி20 போட்டிகளிலும் சதம் அடிக்கக்கூடிய வீரராக இருந்து வருகிறார். அப்படி ஒரு வீரர் வெளியில் காத்திருக்கும் போது சுப்மன் கில் தொடர்ச்சியாக சொதப்பி வருவதை இந்திய அணியின் நிர்வாகம் கவனிக்க வேண்டும். இந்த விடயத்தில் இந்திய அணியின் நிர்வாகம் தான் முக்கிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அவங்க 2 பேரும் குடுக்குற சப்போர்ட் தான் என்னோட அதிரடிக்கு காரணம் – அபிஷேக் சர்மா பேச்சு

அவர் கூறியது போன்றே சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 9 சர்வதேச டி20 போட்டிகளில் 24 ரன்கள் சராசரியுடன் வெறும் 169 ரன்கள் மட்டும் தான் குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த 9 போட்டிகளில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -