என்னை பொறுத்தவரை இவரே சிறந்த கேப்டன். அவருக்காக என் உயிரையே கொடுப்பேன் – இர்பான் பதான் ஓபன் டாக்

Irfan-pathan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் மிக இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடினாலும் குறுகிய ஆண்டுகளில் இளமையான வயதிலேயே தனது கிரிக்கெட் கேரியரையும் முடித்துக்கொண்டார். இதற்காக தேர்வு குழுவில் இருந்த சிலரை சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

Irfan

- Advertisement -

இந்நிலையில் தற்போது தான் விளையாடியதில் விரும்பி விளையாடிய கேப்டன் குறித்தும் தான் உயிரை கொடுக்க நினைக்கும் கேப்டன் குறித்தும் அவர் பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று முறை உலக கோப்பையை வென்ற கேப்டன் தோனி அதனால் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

ஆனால் எந்த ஒரு உலக கோப்பையையும் கைப்பற்ற வில்லை என்றாலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களால் மதிக்கப்பட்ட மிகச்சிறந்த கேப்டனாக கருதப்படுவர் சௌரவ் கங்குலி. தோனியின் தலைமையில் இந்திய அணி பல உச்சங்களை எட்டி இருந்தாலும் இந்திய அணியை கட்டுக்கோப்பாக வடிவமைத்தவர் என்றால் அது கங்குலியை தான் சேரும்.

Irfan-1

யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சேவாக் போன்ற பல திறமையான வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து இந்திய அணி ஆக்ரோஷமான பாதையில் விளையாட வைத்தவர் கங்குலி தான். அவரது கேப்டன்சியில் இந்திய அணி உலக கோப்பை வெற்றி பெறவில்லை என்றாலும் பலம் வாய்ந்த பல எதிரிகளுக்கும் கடுமையான போட்டி தந்தது. ஆகவே இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக இன்றளவும் பலராலும் அவர் பாராட்டப்பட்டு வருகிறார்.

- Advertisement -

அதேபோன்று கும்ப்ளே இந்திய அணிக்கு டெஸ்ட் அணிக்கு மிகச் சிறந்த கேப்டன் தான் இருப்பினும் அவரால் நீண்ட நாட்கள் கேப்டனாக செயல்பட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் உயிரை கொடுக்க விரும்பும் கேப்டன் குறித்து பேசிய இர்பான் பதான் : இது ஒரு கடினமான தேர்வு தான் என்னை பொறுத்த வரையில் கங்குலி தான் எப்போதுமே எனக்கு முதல் கேப்டன்.

Ganguly-dhoni

அவர் என்மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருந்தார். எனக்கு எப்பொழுதுமே கங்குலி தான் முழுமையான ஆதரவாகவும் இருந்தார். என்னை பொறுத்தவரையில் சிறந்த கேப்டன் என்றாலும் எனக்கு பிடித்தவர் என்றாலும் அது கங்குலியை தான் குறிப்பிடுவேன் என்று இர்பான் பதான் கூறினார். மேலும் கும்ப்ளே குறித்து பேசிய அவர் : நீண்ட நாட்கள் அவர் இந்திய அணியை வழிநடத்தி இருக்கலாம்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை சாதனைகள் அடிப்படையில் தோனியுடன் யாரையும் ஒப்பிட முடியாது. இருப்பினும் கங்குலி கேப்டனாக இந்திய அணியில் செய்த மாற்றங்களும் எடுத்த முடிவுகளும் பிரமிக்க வைக்கும் ஒன்று. எனவே இந்திய அணியின் சிறந்த கேப்டன் தேர்வு என்றால் எப்போதும் என்னுடைய முதல் தேர்வு கங்குலி தான் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement