இந்திய அணி நிர்வாகம் விரும்பினால் ஓய்வை வாபஸ் பெற்று மீண்டும் வந்து கிரிக்கெட் விளையாட தயார் – முன்னாள் வீரர் அதிரடி

India

கொரோனா வைரஸ் ஏற்படுத்திவரும் பெரும் பாதிப்பு காரணமாக உலகமே தற்போது பெரும் திகைப்பில் உள்ளது. இந்த சிக்கலிலிருந்து மீண்டு வர உலக நாடுகள் அனைத்தும் புதுப்புது மருந்துகளைக் கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் கும்பலாக எந்த இடத்திலும் கூட வேண்டாம் என்றும் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பெரும்பாலான நாடுகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அரசாங்கத்தினால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Ind

அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதால் இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது, மேலும் உலகம் முழுவதும் நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் நடைபெற இருந்த மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் தற்போது வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் இந்த ஓய்வு நேரத்தை தற்போது சமூக வலைதளம் மூலமாக செலவழித்து வரும் அவர்கள் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும், சக வீரர்களின் உரையாடியும் நேரத்தை கழித்து வருகின்றனர். அதன்படி தற்போது இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் சுரேஷ் ரெய்னாவுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Pathan-3

இந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ஓய்வை அறிவித்த அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராக உள்ளதாக தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வில் இருந்து மீண்டு கிரிக்கெட் விளையாடுவது என்பது புதிதல்ல. ஏற்கனவே இம்ரான்கான், ஜாவித் மியான்தத், கெவின் பீட்டர்சன் போன்றோர் ஓய்வை அறிவித்து விட்டு மீண்டும் அவர்களது அணிக்காக களம் இறங்கி விளையாடி உள்ளனர். தற்போதுகூட ஏற்கனவே ஓய்வை அறிவித்த ஏபி டிவிலியர்ஸ் தென்னாபிரிக்க அணிக்கு திரும்பும் எண்ணத்தில் உள்ளார்.

- Advertisement -

ஆனால் இந்திய கிரிக்கெட்டில் இப்படி ஒரு வீரர் கூட ஓய்வை அறிவித்துவிட்டு மீண்டும் விளையாடியதில்லை. அப்படி விளையாடுவது கடினம் என்ற நிலையில் தற்போது இர்பான் பதான் ஓய்வில் இருந்து மீண்டு வர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து சுரேஷ் ரெய்னாவுடன் பேசுகையில் : தகவல் தான் மிகவும் முக்கியமானது என்னிடம் வந்து இர்பான் நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள். ஆனால் இந்திய அணியின் தேர்வுக்கு ஒரு ஆண்டுக்கு இருக்கிறது நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள் என சொன்னால் மற்ற அனைத்தையும் ஒதுக்கி விட்டு மனதார கடினமாக உழைக்க தொடங்கிவிடுவேன். ஆனால் இந்த தகவலை யார் தெரிவிப்பார்கள் என்பது தான் முக்கியம் என்று கூறினார்.

irfan-pathan

அதேபோல இன்னும் ஆறு மாதத்தில் உலக கோப்பை நடைபெற உள்ளது நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் உங்கள் தேர்வு செய்வது குறித்து யோசிப்போம் என்று சொன்னால் கூட நீங்கள் தயாராக மாட்டீர்களா என்று ரெய்னா கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த பதான் தான் அதற்கும் தயார் என்று குறிப்பிட்டுருந்தார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமான பதான் தனது கிரிக்கெட் வாழ்க்கையினை சிறப்பாக ஆரம்பித்தாலும் விதிவசத்தினால் அவரது கேரியர் வெகுவிரைவாக முடிந்தது.

19 வயதில் அறிமுகமான இர்பான் 29 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 100 விக்கெட்டுகளையும் அதேபோல 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளையும், 24 டி20 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காயம் காரணமாக தனது கிரிக்கெட் வாழ்வில் சறுக்கல் ஏற்பட்டாலும் அணியிலிருந்து நீக்கப்பட்ட தான் முக்கிய காரணமாக அப்போதைய தேர்வுக்குழு உறுப்பினரான தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தை குறிப்பிட்டிருந்தார்.

Pathan 1

மேலும் அவர் எதற்காக ஒதுக்கப் பட்டார் என்றும் அவருக்கு சரியான காரணம் இதுவரை அளிக்கப்படவில்லை என்றும் இர்பான் பதான் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தான் விளையாடிய காலத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராகவும், பேட்டிங்கிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அதிரடி காட்டிய இவருக்கு இன்றளவிலும் ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். மிகப் பெரிய வீரராக வந்திருக்க வேண்டிய இர்பான் பதானின் கிரிக்கெட் வாழ்க்கை மிகக் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.