6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் கால் பாதிக்கப்போகும் வேகப்பந்து வீச்சாளர்..?

India
- Advertisement -

கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆல்ரவுண்டர்கள் மிகவும் குறைவு தான். அப்படி இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த பந்துவீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வந்தவர் இர்பான் பதான். இந்திய அணியின் சிறந்த ஆள் ரௌண்டராக இருந்து வந்த இர்பான் பதான், 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் இடப்பெறவில்லை. இந்நிலையில் தற்போது இந்திய அணியில் மீண்டும் இடம்பெற அணைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

irfan

- Advertisement -

இந்திய வீரரான இர்பான் பதான், கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். அதன் பின்னர் 29 டெஸ்ட் போட்டிகள் 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளையும் ஒரு நாள் போட்டிகளில் 173 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான கங்குலி தலைமையிலும், தோனி தலைமையிலும் விளையாடியுள்ளார். தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.மேலும் சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கிரிக்கெட் பயிற்சி கூடம் ஒன்றையும் துவங்கியுள்ளார்.

irfan-pathan

இந்த பயிற்சி கூடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற இர்பான் பதான் பேசுகையில் “பஞ்சாபில் கிரிக்கெட் பயிற்சி கூடத்தை துவங்குவதை எண்ணி பெருமைகொள்கிறேன். பஞ்சாப் பல சிறந்த கிரிக்கெட் வீரர்களை இந்திய அணிக்கு அளித்துள்ளது. மேலும், நான் இந்திய அணியில் மீண்டும் இடம்பெற என்னால் முடிந்த பல முயற்சிகளை செய்து வருகிறேன். விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளர். ஏற்கனவே இந்திய அணியில் ஏராளமான இளம் வீரர்கள் அணியில் இடம்பிடிக்க போராடி வருகின்றனர். இதில் அவர்களுக்கெல்லாம் ஈடுகொடுத்து இர்பான் பதான் இந்திய அணியில் இடம்பிடிப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்

Advertisement