இந்தாண்டின் சிறந்த ஐ.பி.எல் அணியை தேர்வு செய்த இர்பான் பதான் – ரோஹித்துக்கு பதில் புதிய கேப்டன்

pathan 1
- Advertisement -

13-ஆவது ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ரசிகர்கள் இல்லாமல் இந்தியாவில் இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெறும் மூன்று மைதானங்களில் 60 போட்டிகளில் நடைபெற்று முடிந்துவிட்டது. இந்த போட்டிகளுக்காக பிசிசிஐ கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் ஐக்கிய அரபு கிரிக்கெட் வாரியத்திற்கு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கட்து. இந்த தொடர் முடிந்தவுடன் மிகச் சிறந்த அணியை கிரிக்கெட் வல்லுனர்களும் விமர்சகர்களும் வெளியிடுவார்கள். இப்படி இர்பான் பதான் தனக்குப் பிடித்த மிகச் சிறந்த அணியை வெளியிட்டிருக்கிறார்.

mi

இந்த அணியில் துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டிருக்கின்றனர். கேஎல் ராகுல் இந்த முறை அதிக ரன் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றவர் ஆவார். தவான் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்து அசத்தினார். மூன்றாவது வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் வருகிறார்.

- Advertisement -

4-வது வீரராக பெங்களூர் அணியின் அதிரடி வீரர் ஏபி டிவிலியர்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஐந்தாவது வீரராக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் கேப்டனாக இருந்த கெரோன் பொல்லார்ட் இடம் பிடித்திருக்கிறார். ஆச்சரியமாக இவரைத்தான் இர்பான் பதான் கேப்டனாகவும் நியமித்திருக்கிறார். ஆறாம் வீரராக டெல்லி அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்  இடம் பெற்றிருக்கிறார்.

Pollard

சுழற்பந்து வீச்சாளரகளாக ராகுல் திவாடியா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் வேகப்பந்துவீச்சாளர் களாக காகிசோ ரபாடா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி ஆகியோரும் இவரது அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். ஆச்சரியமாக விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, ரோகித்சர்மா ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய வீரர்களுக்கு இவரது அணியில் இடமில்லை.

- Advertisement -

Stonis

இர்பான் பதான் தேர்வு செய்துள்ள ஆடும் லெவன் :

கே.எல் ராகுல், ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ், கீரன் பொலார்டு (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ராகுல் திவாடியா, யுஸ்வேந்திர சாஹல், காகிசோ ரபாடா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி.

Advertisement