5 ஆவது டி20 போட்டிக்கு முன்னதாக சூரியகுமார் யாதவின் கேப்டன்சியை பாராட்டிய – இர்பான் பதான்

Irfan Pathan and SKY
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை டிசம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளும் தற்போது அங்கு தீவிர வலைபயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

சூரியகுமார் யாதவின் கேப்டன்சியை பாராட்டனும் : இர்பான் பதான்

ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளின் முடிவில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிப்பதால் கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்ற முனைப்பு காட்டும்.

- Advertisement -

அதேவேளையில் இந்த கடைசி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தினால் இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்யலாம் என்ற முனைப்புடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்க உள்ளதால் இந்த கடைசி போட்டியானது ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த தொடரினை பொருத்தவரை இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவின் மோசமான பேட்டிங் பார்ம் பலரது மத்தியிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூரியகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் சரிந்து இருந்தாலும் அவரது கேப்டன்சியை பாராட்டியாக வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போதைய டி20 அணியில் சூரியகுமார் யாதவ் பேட்டிங் பார்முக்கு திரும்புவது அவசியம் தான். அதே வேளையில் அவருடைய சிறப்பான கேப்டன்சியை நாம் பாராட்டியாக வேண்டும். ஏனெனில் சூரியகுமார் யாதவின் கேப்டன்சி அற்புதமாக இருக்கிறது. அவரது கேப்டன்சி குறித்து நாம் யாரும் பெரியளவில் பாராட்டுவதில்லை. அவர் பேட்டிங்கில் மிக சிறப்பாக ஆடினால் கொண்டாடுகிறோம்.

இதையும் படிங்க : மோர்னே மோர்கல் தந்த பிராக்டீஸ் தான் இதுக்கெல்லாம் காரணம் – ஷிவம் துபே பேட்டி

அதேபோன்று கேப்டன்சியில் அவர் சிறப்பாக செயல்படும் போதும் நாம் கொண்டாட வேண்டும். ஒரு கேப்டனாக 83 சதவீத போட்டிகளை அவர் வெற்றி பெற்று கொடுத்துள்ளார். எனவே அவர் பாராட்டுக்கு தகுதியானவர் என இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement