உலகின் தலைசிறந்த கேப்டன்களான இந்த இருவரின் கலவை தான் ரோஹித் – புகழ்ந்து தள்ளிய இர்பான் பதான்

Rohith
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த பதிமூன்றாவது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனையை படைத்தது. ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் 2008 ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டு வரை கிட்டத்தட்ட ஐந்து சீசன்கள் வரை மும்பை அணியால் ஒரு கோப்பையை கூட கைப்பற்றவில்லை.

mi

ஆனால் 2013ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவின் தலைமையில் மும்பை அணி வந்த பிறகு அந்த அணி உச்சத்திற்கு சென்றது என என்றே கூறலாம். ஏனெனில் கடந்த 8 ஆண்டுகளில் 5 முறை கோப்பையை ரோகித் சர்மாவின் தலைமையில் மும்பை அணி பெற்றுள்ளது. இந்த தொடர் வெற்றிகளுக்கு காரணமாக ரோகித் சர்மாவின் அசாத்தியமான கேப்டன்ஷிப் காரணம் என்று பல முன்னாள் வீரர்கள் தெரிவித்து உள்ளனர்.

- Advertisement -

அதேபோன்று இந்த தொடரிலும் பதட்டமில்லாத ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் அதிகளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி முன்னாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இனி இந்திய t20 அணிக்கும் ரோஹித்தை கேப்டனாக நியமிக்கலாம் என கௌதம் கம்பீர், மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்தினை வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.

Rohith

இந்நிலையில் தற்போது ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டன்களான கங்குலி மற்றும் தோனி ஆகியோரது கலவைதான் ரோஹித். கங்குலி எப்போதுமே தனது அணியின் பந்து வீச்சாளர்களை நம்பித்தான் அதன் வழியாகவே செல்வார். மேலும் சில நேரங்களில் உள்ளுணர்வின் அடிப்படையில் முடிவுகளையும் எடுப்பார்.

Rohith-1

அதே போன்று தற்போது ரோகித் சர்மா அந்த வழியில் பயணித்து வருகிறார். குறிப்பாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் அவர் ராகுல் சாகரை நீக்கி ஜெயந்த் யாதவை பயன்படுத்திய விதம் அவரது கேப்டன்ஷிப்பின் திறமையை வெளிக்காட்டியது. அவரின் சிந்தனை தெளிவாக இருந்தது, திட்டமும் சரியாக அமைந்தது. இதன் காரணமாகவே அவர் ஒரு சிறப்பான கேப்டனாக திகழ்கிறார் என இர்பான் பதான் புகழ்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement