6 பால்ல 6 யார்க்கர் வீசும் இப்படி ஒரு பவுலரை நான் பார்த்ததே இல்ல. என்ன டேலன்ட் இவருக்கு – வியந்து போன பதான்

pathan 1
- Advertisement -

சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் தற்போது உலக கிரிக்கெட்டை உற்றுப் பார்க்க வைத்திருக்கிறார். அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார். நேற்று நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் அடித்தது. டெல்லி அணியின் ஆட்டத்தின்போது கடைசி ஓவரை நடராஜன் தான் வீசினார்

Nattu-2

டேவிட் வார்னர் நடராஜன் மீது அதீத நம்பிக்கை வைத்து கடைசி ஓவரை எப்போதும் கொடுத்து வருகிறார். டெல்லி அணியில் கடைசி ஓவரில் ஷிம்ரன் ஹெட்மையர் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்தனர். இருவருமே அபாரமான ஆட்டக்காரர்கள். இந்த இருவருக்கு தான் நடராஜன் பந்து வீசினார். இந்த இருவரையும் வைத்து கடைசி ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து இருக்கிறார் என்பது நம்பமுடியாத செய்தியாக இருக்கிறது.

- Advertisement -

இந்த ஓவர் முழுவதும் 6 பந்துகள் 6 யார்க்கர் மிகத் துல்லியமாக வீசி அந்த இரண்டு பேட்ஸ்மேன்களையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினார் நடராஜன். மேலும், உலக கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் நடராஜன் போன்ற பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும், இர்பான் பதான் இவரை வாய்நிறைய புகழ்ந்து கொண்டு இருக்கிறார் ..

nattu 1

இந்திய அணியில் இடம்பெறாத ஒரு உள்ளூர் பந்துவீச்சாளர் இதுபோன்ற ஒரு ஐபிஎல் தொடரில் இத்தனை யார்க்கர் வீசி நான் பார்த்ததே இல்லை என்று பிரம்மிப்பில் ஆழ்ந்துவிட்டார். நடராஜனும் அத்தகைய பணியை தான் இந்த வருட ஐபிஎல் தொடரில் செய்து கொண்டிருக்கிறார். அவர் எடுத்த விக்கெட்டுகள் எல்லாம் சிறிய சிறிய வீரர்களின் விக்கெட்டுகள் இல்லை.

Nattu

அடித்தால் பெரிய தலைகளின் விக்கெட்டுகள் தான் விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, டி வில்லியர்ஸ், ரசல் மற்றும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் என அவர் வீழ்த்திய வீரர்களின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. இந்த வருட ஐபிஎல் தொடரில் மட்டும் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். வெகு சீக்கிரத்தில் இவர் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று நம்பப்படுகிறது.

Advertisement