நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது வெற்றிகரமாக இந்த தொடரினை துவங்கி உள்ளது. இத்தனை ஆண்டு காலமாக கோப்பையை கைப்பற்றாத அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆர்.சி.பி இம்முறை வலுவாக இந்த தொடரினை ஆரம்பித்துள்ளது.
ஆர்.சி.பி அணியில் அந்த 2 பேட்ஸ்மேனும் டேஞ்சரா இருப்பாங்க : இர்பான் பதான்
இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையில் வெல்லாத ஆர்.சி.பி அணி இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்றும் ரசிகர்கள் பெரும் ஆதரவை ஆர்.சி.பி அணிக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற கையோடு தற்போது அடுத்ததாக மார்ச் 28-ஆம் தேதி ஆர்சிபி அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரில் பலமான அணியாக திகழ வேண்டும் என்று பெங்களூரு அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அந்த அணியின் வீரர்கள் சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாலும் நிச்சயம் ஒரு டேஞ்சரான அணியாக ஆர்சிபி திகழும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக ஆர்.சி.பி அணியில் ஆபத்தாக இருக்கப்போகும் இரண்டு பேட்ஸ்மேன்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஆண்டு ஆர்.சி.பி அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது.
அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் அந்த அணியின் ஆபத்தான வீரர்களாக இருப்பார்கள். ஏனெனில் கடந்த பல சீசன்களாகவே டிவில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் இறுதி கட்டத்தில் இருக்கும் வேளையில் அவர்களை தவிர்த்து மற்ற யாரும் பெரிய அளவில் சோபிக்க மாட்டார்கள். ஆனால் இம்முறை மிடில் ஆர்டரும் சிறப்பாக இருக்கிறது. அதை தாண்டி பின் வரிசையில் லிவிங்ஸ்டன் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : ஆஸிக்கு பெரிய விக்கெட்டான விராட் கோலி கூட இதை செஞ்சா போதும்.. மேட்ச் ரெடியாகிடலாம்.. ஹேசல்வுட் பேட்டி
அவர்கள் இருவரும் இணைந்து விளையாடினால் நிச்சயம் எதிரணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்து விடுவார்கள் என இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி நிச்சயம் அதிக கவனத்தை ஈர்க்கும் அணியாக இருக்கும் என்றும் இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.



