2022இல் அதைக் கேட்ட கருண் நாயருக்கு கிரிக்கெட் கருணை காட்டிருச்சு.. சரியா பிடிச்சுகோங்க.. பதான் பாராட்டு

Irfan Pathan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 3 பயிற்சிப் போட்டிகளில் விளையாட உள்ளது.

அந்தப் போட்டிகளில் விளையாடுவதற்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் கருண் நாயர் இடம் பிடித்துள்ளது பல ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 2016ஆம் ஆண்டு அறிமுகமான அவர் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சேவாக்கிற்கு பின் முச்சதம் அடித்து மாபெரும் சாதனை படைத்தார்.

- Advertisement -

கருண் நாயருக்கு:

இருப்பினும் அதற்கடுத்த போட்டிகளில் பெரிய ரன்கள் அடிக்கத் தவறிய அவர் ஐபிஎல் தொடரிலும் அசத்தவில்லை. அதனால் கழற்றி விடப்பட்ட அவர் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து கம்பேக் கொடுப்பதற்காக போராடி வந்தார். அந்த போராட்டதுக்கு மத்தியில் 2022ஆம் ஆண்டு கருண் நாயர் “அன்பான கிரிக்கெட்டே, எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பைக் கொடு” என்று ட்விட்டரில் ஏக்கமாக பதிவிட்டு பிசிசிஐ’யிடம் வாய்ப்பு கேட்டார்.

அப்போதும் பிசிசிஐ கண்டுகொள்ளாத நிலையில் தொடர்ந்து உள்ளூரில் அசத்தி வந்த அவர் கடந்த ரஞ்சிக் கோப்பையில் 863 ரன்களை அடித்து விதர்பா கோப்பையை வெல்ல உதவினார். மேலும் கடந்த விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் தொடரில் அவர் 779 ரன்களை 389.50 என்ற அபார சராசரியில் குவித்தார். அத்துடன் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லிக்காக ஒரு போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் தன்னுடைய மொத்த திறமையும் காட்டினார்.

- Advertisement -

கருணை காட்டும் கிரிக்கெட்:

இதற்கிடையே 2023, 2024 கவுன்டி தொடரில் இங்கிலாந்து மண்ணில் அவர் 10 போட்டிகளில் 736 ரன்களை 56.61 என்ற சராசரியில் குவித்து அசத்தினார். அதனால் வேறு வழியில்லாத பிசிசிஐ தற்போது இந்தியா ஏ அணிக்காக தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக விளையாடும் பட்சத்தில் கருண் நாயருக்கு இந்தியாவுக்காக களமிறங்கும் வாய்ப்பு தாமாகவே கிடைக்கும் சூழ்நிலை பிரகாசமாகியுள்ளது.

இதையும் படிங்க: சுப்மன் கில்லின் அந்த குறையை சொல்றவங்க உங்க ரெக்கார்டை பாருங்க.. சேத்து அடிப்பாரு.. சாஸ்திரி பதிலடி

இந்நிலையில் 2022இல் வாய்ப்பு கேட்ட கருண் நாயருக்கு தற்போது கிரிக்கெட் கருணைக் காட்டியுள்ளதாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார். அதை சரியாக பயன்படுத்துமாறு தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில். “கருண் நாயர் இந்தியா ஏ அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது, அன்பான கிரிக்கெட் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் மற்றுமொரு வாய்ப்பை அவருக்கு வழங்குவதற்கான தெளிவான அறிகுறியாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement