கஷ்டப்பட்டு உழைச்சது அவரு, பேரு வாங்கிட்டு போறது நீங்களா? நட்சத்திர இந்திய வீரரை மறைமுகமாக தாக்கிய இர்பான் பதான்

Irfan Pathan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவுக்குள்ளானது. இருப்பினும் முக்கியமான 3வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு டி20 தொடரில் சந்திக்கும் தோல்வியை தவிர்த்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. கயானாவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் ப்ரெண்டன் கிங் 42 ரன்களும் கேப்டன் ரோவ்மன் போவல் 40* ரன்கள் எடுத்த உதவியுடன் 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 1, கில் 6 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் நான் இருக்கிறேன் என்ற வகையில் இந்த தொடரில் முதல் முறையாக அசத்திய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 83 (44) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார். அவருடன் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மா 49* (37) ரன்களும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 20* (15) ரன்களும் எடுத்ததால் 17.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா சிறப்பான வெற்றி பெற்றது.

- Advertisement -

இர்பான் பதான் விமர்சனம்:
முன்னதாக இப்போட்டியில் திலக் வர்மாவை 50 ரன்களை தொடவிடாமல் கேப்டன் பாண்டியா சுயநலமாக நடந்து கொண்டது மிகப்பெரிய சர்ச்சையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. அதாவது இந்த தொடரில் அறிமுகமாகி 20 வயதிலேயே இதர வீரர்கள் தடுமாறிய போது சவாலான பிட்ச்சில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் 39, 51 என அதிகபட்ச ஸ்கோர் அடித்து வெற்றிக்கு போராடிய திலக் வர்மா இப்போட்டியில் சூரியகுமாருடன் இணைந்து பொறுப்புடன் செயல்பட்டு இறுதி வரை நின்று வெற்றிக்கு போராடினார்.

குறிப்பாக 18வது ஓவரின் 4வது பந்தில் 49 ரன்களை தொட்ட அவருக்கு 5வது பந்தில் சிங்கிள் எடுத்து 6வது பந்தில் 50 ரன்கள் தொடும் வாய்ப்பை கேப்டனாக பாண்டியா கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதை செய்யாத பாண்டியா அதிரடியான சிக்ஸர் அடித்து தம்முடைய பெயரில் ஃபினிஷிங் செய்து சுயநலமாக நடந்து கொண்டார். அதனால் கோபமடைந்த ரசிகர்கள் இத்தொடர் முழுவதும் கடினமாக உழைத்து வரும் இளம் வீரருக்கு வருங்காலங்களில் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கான உத்வேகத்தை கொடுக்கும் 50 ரன்களை தொடும் வாய்ப்பை கொடுத்தால் என்ன? என்று பாண்டியாவை கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

மேலும் 14 பந்தில் வெறும் 2 ரன்கள் தேவைப்பட்ட போது திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்காமல் சிக்ஸருடன் ஃபினிஷிங் கொடுக்க இது என்ன உலக கோப்பையா?அல்லது ரன் ரேட்டுக்காக விளையாடுகிறோமா? என்று பாண்டியாவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் வெளிப்படையாக தாக்கினார். இவை அனைத்தையும் விட “நீ கடைசி வரை நின்று போட்டியை ஃபினிஷிங் செய்ய வேண்டும்” என்று திலக் வர்மா 44 ரன்களில் இருந்த போது சொன்ன ஹர்திக் பாண்டியா கடைசியில் சொன்ன வார்த்தையை காப்பாற்றாமல் சிக்ஸர் அடித்து தாம் ஃபினிஷிங் செய்து நம்ப வைத்து ஏமாற்றியது ஸ்டம்ப் மைக்கில் பதிவான வீடியோவின் வாயிலாக தெரிய வந்தது.

இந்நிலையில் இத்தொடர் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்தது திலக் வர்மா ஆனால் அவரை ஃபினிஷிங் செய்ய விடாமல் பேர் வாங்கிக் கொண்டு சென்றது ஹர்திக் பாண்டியா என்ற வகையில் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பெயர் குறிப்பிடாமல் தம்முடைய ட்விட்டரில் இந்தியில் மறைமுகமாக தாக்கியுள்ளார். இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நீங்கள் கடினமான வேலைகளை செய்யுங்கள். நான் எளிதான வேலையை செய்கிறேன். இதை நான் ஏற்கனவே கேள்வி பட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:IND vs WI : திலக், சூர்யகுமார் இல்ல – அவர் தான் 3வது போட்டியின் ரியல் மேட்ச் வின்னர், சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டு

அதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஹர்திக் பாண்டியாவை தான் குறிப்பிடுவது நன்றாக தெரிவதாக பதிலளித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 4வது போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement