கொரோனா வைரஸ் கடந்த 5 மாதங்களாக மக்களின் அடிப்படை வாழ்க்கையை அழித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் காரணமாக எந்த ஒரு விளையாட்டுப் போட்டியிலும் நடக்கவில்லை. குறிப்பாக இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் நடக்காததால் அது சார்ந்துள்ள தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பேட் தயாரித்தல், கிரிக்கெட் உபகரணங்கள் தயாரித்தல், அதனை மறுசீரமைப்பு செய்து கொடுத்தல் என அதனை சார்ந்த இருக்கும் பல சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன . கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை என்றால் இந்த சிறுகுறு தொழில்கள் செய்யும் மக்களுக்கும் மிகப்பெரிய சிரமமாகிவிடும்.
இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு காலணியை சரி செய்து கொடுக்கும் அதிகாரப்பூர்வ தொழிலாளியான பாஸ்கரனுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கை நடத்தவே மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகியது.

இதனை அறிந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ஓடி வந்து தனது உதவி கரத்தை நீட்டியுள்ளார். ஏற்கனவே கரோனா வைரஸ் தாக்கியவுடன் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இர்பான் பதான் மற்றும் யூசப் பதான் தொடர்ந்து உதவி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆர்.பாஸ்கரனுக்கு 25,000 ரூபாயை உதவியாக வழங்கியுள்ளார். இர்பான் பதான் ஊரடங்கு காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை. இதன் காரணமாக இவரது வருமானம் பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த இர்பான் பதான் உடனடியாக இவருக்கு உதவி செய்துள்ளார்.

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும் இவரை கண்டுகொள்ளாத நிலையில் இருப்பதால் இவருக்கு உதவி இருப்பது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.



