
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமைந்தது. கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் அசத்திய இந்தியா இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது.
அந்த வெற்றிக்கு கேப்டன் ரோகித் சர்மா மிகவும் முக்கிய பங்காற்றினார். அதே போல நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தொடர் முழுவதும் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டு தொடர்நாயகன் விருதை வென்றார். மேலும் தொடர் முழுவதும் தடுமாறிய விராட் கோலி ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று தன்னை சாம்பியன் என்பதை நிரூபித்தார்.
இர்பான் பதான் பாராட்டு:
இந்நிலையில் அவர்களுக்கு சமமாக ஹர்திக் பாண்டியாவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு ஸ்பெஷல் வெற்றியை பெற்றுக் கொடுத்ததாக இர்பான் பதான் பாராட்டியுள்ளார். குறிப்பாக ஐபிஎல் 204 தொடரில் மும்பையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தால் தாமே ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றி கொடுத்ததாக தற்போது இர்பான் பதான் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியாவுக்கு இது மிகவும் ஸ்பெஷலான பயணம். ஏனெனில் அவர் விமர்சனங்களை தாண்டி கம்பேக் கொடுத்துள்ளார். உண்மையில் அவரை கடுமையாக விமர்சித்தவர்களில் நானும் ஒருவன்”
“ஏனெனில் அவர் ஐபிஎல் தொடரின் போது நன்றாக செயல்படவில்லை. அந்தத் தொடரில் அவர் ஏராளமான தவறுகளை செய்தார். ஆனால் அங்கிருந்து கம்பேக் கொடுத்த அவர் உலகக் கோப்பை வென்றது மிகவும் ஸ்பெஷலானது. அவர் தன்னுடைய கேரக்டரை காண்பித்து சிறப்பாக செயல்பட்டுள்ளார். ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா போல அவரும் இந்திய அணியில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஸ்பெஷலான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அந்த சம்பவத்தை மறந்துடாதீங்க.. அற்புதமான ஆண்டர்சன் பார்ட்டியை கலைச்சு விடப்போறேன்.. இங்கிலாந்தை எச்சரித்த ஜோசப்
முன்னதாக ரோஹித்துக்கு பதிலாக மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதால் ஹர்திக் பாண்டியாவை அந்த அணியின் ரசிகர்களே கடுமையாக விமர்சித்துக் கிண்டலடித்தனர். அதே போல 2023 உலகக் கோப்பையில் காயமடைந்து வெளியேறியதால் ஹர்திக் பாண்டியா பணத்துக்காக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுவார் என்று இந்திய ரசிகர்களும் விமர்சித்தனர். ஆனால் இந்த உலகக் கோப்பையை வென்ற பின் ஆனந்த கண்ணீர் விட்ட பாண்டியா தாம் பணத்துக்காக மட்டுமல்ல நாட்டுக்காகவும் உண்மையாக விளையாடுவேன் என்பதை நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.