- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இர்பான் பதான். அவர் விளையாடிய கடைசி போட்டி இதுதான் – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான இர்பான் பதான் இந்திய அணிக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமானார் . அதன்பின்னர் பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி உள்ள இர்பான் பதான் 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளையும், 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 24 டி20 போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் தற்போது நேற்று அவர் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை முடிவை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அவரது ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும் இந்த ஓய்வு முடிவு குறித்து அவர் பேசுகையில் : கங்குலி,சச்சின்,டிராவிட் மற்றும் லட்சுமண் போன்ற வீரர்களுடன் ஓய்வு அறையை பகிர்ந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். எனக்கு தேவையான அளவு ஆதரவை வழங்கி எனது குடும்பத்திற்கும், எனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். நான் எப்போது அணிக்கு திரும்பி வந்தாலும் அவர்கள் ஆதரவு அளித்தார்கள் அவர்களின் ஆதரவை நாம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வைத்தது என்றும் அவர் தெரிவித்தார்.

கடைசியாக 2012 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்றார் அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் திரும்பும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. மேலும் சில வருடங்களாக ஐ.பி.எல் தொடரிலும் அவர் ஏலம் போகாததால் இந்த ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by