- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தலைக்கு மேல் தொங்கும் அந்த கதிக்காக பயப்படாம.. ரன்ஸ் அடிக்க விராட் இதை செய்யனும்.. பதான் அட்வைஸ்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் தோற்ற இந்தியா புதிய கேப்டன் கில் தலைமையில் கோப்பையை வெல்லும் வாய்ப்பைக் கோட்டை விட்டது. முன்னதாக அத்தொடரில் விராட், ரோஹித் 224 நாட்கள் கழித்து இந்தியாவுக்காக விளையாடுகின்றனர்.

அதில் ரோஹித் சர்மா முதல் போட்டியில் 8 ரன்னில் அவுட்டானாலும் 2வது போட்டியில் 73 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால் தம்முடைய வாழ்நாளில் முதல் முறையாக விராட் கோலி அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. ஏற்கனவே 2027 உலகக்கோப்பைக்கு முன் அவரையும் விராட் கோலியையும் கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது.

- Advertisement -

தலைக்கு மேல் கத்தி:

அப்படிப்பட்ட சூழ்நிலையில் விராட் கோலி டக் அவுட்டாகியுள்ளது அவருடைய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இந்நிலையில் விராட், ரோஹித்துக்கு போட்டியாக அபிஷேக் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகிய இளம் வீரர்கள் காத்திருப்பதாக இர்பான் பதன் தெரிவித்துள்ளார். எனவே தலை மேல் தொங்கும் கத்திக்காக பயப்படாமல் விராட் கோலி ரன்கள் அடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கு செய்ய வேண்டியது பற்றி அவர் தெரிவித்த ஆலோசனை பின்வருமாறு. “2 போட்டிகளில் 2 டக். அது அடிக்கடி நடக்கக்கூடியதல்ல. அது அழுத்தம், துருப்பிடித்தல் மற்றும் சமூக வலைதளங்களில் காணப்படும் பேச்சுக்களால் நடக்கலாம். விராட், ரோஹித் அந்த சூழ்நிலைகளால் பாதிக்கக்கூடாது என்பதில் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். அதே சமயம் நல்ல செயல்திறனை வெளிப்படுத்தாவிட்டால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது”

- Advertisement -

பதான் அட்வைஸ்:

“இதிலிருந்து வெளிவருவதற்கு விராட் கோலி ஆரம்பத்திலேயே சிங்கிள் எடுத்து எதிர்ப்புறம் சென்று விட வேண்டும். உங்களுடைய பெயருக்கு எதிராக 2 டக் அவுட் இருக்கும் போது நீங்கள் முதல் ரன்னை எடுக்க விரும்புவீர்கள். ஆனால் அதை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்ற விரக்தி இல்லாத மனநிலையை உறுதி செய்து கொள்ளுங்கள். விராட் கோலி தொடர்ந்து மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்ய வேண்டும். களத்தில் நேரத்தை செலவிடும் போது அவருக்கு தாமாக ரன்கள் வரும்”

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய தொடரில் இடம் இல்லை.. புதிய முடிவை கையிலெடுத்த ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ

“அவருக்கு ஒருநாள் போட்டிகள் அதிகம் பிடிக்கும். விராட், ரோஹித் அற்புதமாக விளையாடியவர்கள். எனவே அவர்கள் கொஞ்சம் தடுமாறினாலும் வாய்ப்புகளைக் கொடுப்பது முக்கியம். அதே சமயம் ஜெய்ஸ்வால் போன்றவர் பெஞ்சில் அமருப்பதால் தொடர்ந்து வாய்ப்பளிப்பது கடினம். அப்படி உங்களுடைய தலைக்கு மேல் கத்தி தொங்கும் போது நன்றாக விளையாடுவது எளிது கிடையாது. இவையெல்லாம் விராட் கோலியை பாதிக்காது என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்

- Advertisement -