இவரே சொல்லிட்டாரு இல்ல. அப்புறம் என்ன ஐ.பி.எல் நிச்சயம் நடக்கும் – இர்பான் பதான் உறுதி

Irfan-pathan
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் நடைபெற்று வரும் இந்த தொடர் இந்த ஆண்டு பதின்மூன்றாவது சீசனாக கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்தது.

Ipl cup

- Advertisement -

ஆனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் இரு முறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த தொடர் வெளிநாட்டில் நடை பெறலாம் அல்லது காலி மைதானத்தில் நடைபெறும் என ஏகப்பட்ட செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால் அவை அனைத்திற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பி.சி.சி.ஐ தரப்பில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த தொடரானது வரும் செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் நிச்சயம் இந்த தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து இருந்ததால் இந்த நடைமுறை தற்போது கையாண்டு வருகின்றனர்.

IPL-1

அப்படி செப்டம்பர் 26ம் தேதி துவங்கும் இந்த தொடரானது இரு நகரங்களில் மட்டுமே நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதன்படி சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இரு நகரங்களில் மட்டுமே நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள டிஎன்பிஎல் தொடர் நடைபெற்ற அனைத்து மைதானங்களிலும் போட்டிகள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த தொடர் திட்டமிட்டபடி உறுதியாக நடைபெறும் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆன இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் அந்த அறிக்கையை முழுமையாக படித்தேன். அவர்கள் அதில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவது தான் சிறந்தது என்று தெரிவிக்க முன்வந்துள்ளனர்.

Ganguly 1

மேலும் பிசிசிஐ தலைவர் கங்குலியிடமிருந்து ஐபிஎல் நடக்கும் என்ற தகவல் வெளியானதால் இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இது நல்ல செய்தி. நிச்சயம் கங்குலி நடத்த நினைத்தால் நடத்திக் காட்டுவார் அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எனவே நிச்சயம் இந்த ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று தான் கருதுவதாக இர்பான் பதான் உறுதி அளித்துள்ளார்.

Advertisement