மொத்த வெறியையும் காட்டிய பாபர் படை.. 32/6 என விழுந்தும் அடங்க மறுத்த அயர்லாந்து.. பாகிஸ்தான் வெல்லுமா?

PAK vs IRE
- Advertisement -

ஐசிசி 2024 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 16ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் 36வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. அந்த சம்பிரதாய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்துக்கு முதல் ஓவரிலேயே ஆண்டி பால்பிரினை டக் அவுட்டாக்கிய சாகின் அப்ரிடி அடுத்ததாக வந்த லார்கன் டுக்கரை 2 ரன்னில் காலி செய்தார். போதாக்குறைக்கு மறுபுறம் தடுமாறிய கேப்டன் பால் ஸ்டெர்லிங் 1 ரன்னில் முகமது அமீர் வேகத்தில் ஆட்டமிழந்தார். அதனால் 4/3 என ஆரம்பத்திலேயே திணறிய அயர்லாந்துக்கு அடுத்ததாக வந்த ஹேரி டெக்டர் 0, குர்ட்டிஸ் கேம்பர் 7, ஜார்ஜ் டாக்ரேல் 11 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்

- Advertisement -

மறுத்த அயர்லாந்து:
அதனால் 6.3 ஓவரில் 32/6 என மேலும் சரிந்த அயர்லாந்து 50 ரன்கள் தாண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் அப்போது கெரத் டிலானி அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக 31 (19) ரன்கள் குவித்து போராடி அவுட்டானார். அடுத்ததாக வந்த மார்க் அடைர் 15, பேரி மெக்கார்த்தி 2 ரன்களில் அவுட்டாகி சென்றார்கள். அதன் காரணமாக ஓரளவு தப்பிய அயர்லாந்து 100 ரன்கள் தாண்டாது என்று நம்பப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்ட ஜோஸ்வா லிட்டில் 22* (18) ரன்கள் குவித்தார். அவருடன் பெஞ்சமின் 5* (20) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் முழுமையாக தாக்குப் பிடித்த அயர்லாந்து 106/9 ரன்கள் எடுத்தது. மறுபுறம் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அந்த மொத்த வெறியையும் இப்போட்டியில் காட்டி 32/6 என ஆரம்பத்திலேயே அயர்லாந்தை மடக்கியது.

- Advertisement -

அதனால் கண்டிப்பாக அயர்லாந்து அணியை பாகிஸ்தான் ஆல் அவுட் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 10 ஓவர்களுக்கு மேல் கொஞ்சம் தடுமாற்றமாகவே பந்து வீசிய பாகிஸ்தானிடம் அடங்க மறுத்த அயர்லாந்து ஆல் அவுட்டாகாமல் தப்பித்தது. மறுபுறம் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 3, இமாத் வாசிம் 3, முகமது அமீர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையும் படிங்க: மொத்த வெறியையும் காட்டிய பாபர் படை.. 33/6 என விழுந்தும் அடங்க மறுத்த அயர்லாந்து.. பாகிஸ்தான் வெல்லுமா?

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் 107 ரன்களை துரத்தி வருகிறது. குறிப்பாக இந்த போட்டியில் தோற்றால் குரூப் ஏ புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் கடைசி இடத்தை பிடித்து மற்றொரு அவமானத்தை சந்திக்கும். எனவே அதை தவிர்க்கும் முனைப்புடன் போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement