இரண்டாவது தகுதிச்சுற்றில் வெற்றிபெற்று டி20 உலககோப்பைக்கு தகுதி பெற்ற அணி எது தெரியுமா ? – விவரம் இதோ

- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான முன்னணி அணிகள் தயாராக இருக்கும் நிலையில் கடைநிலை அணிகளுக்கு தகுதிச்சுற்று போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

Ireland 1

- Advertisement -

நேற்று அபுதாபியில் நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் கனடா அணி யுஏஇ அணியும் மோதின. இந்த போட்டியில் யுஏஇ வெற்றி பெற்றதால் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் அந்த அணியால் அயர்லாந்தை வீழ்த்த முடியவில்லை இதன் காரணமாக அயர்லாந்து நெட் ரன்ரேட் அடிப்படையில் குரூப்பில் பி-யில் முதலிடம் பிடித்து டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

இதற்கு முன்னர் குரூப் ஏ-வில் பப்புவா நியூ கினியா அணி உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அயர்லாந்து தகுதி பெற்றுள்ளதால் இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஐசிசி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ireland 2

இந்த தொடரில் இவ்விரு அணிகளின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று பார்த்தால்தான் தெரியும் மேலும் இவ்விரு அணிகளும் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றால் அந்த அணிகளுக்கு அதுவே பெரிய சாதனைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement