அடக்கடவுளே அயர்லாந்து அணி இப்படியாக தோக்கணும் மெர்சல் காட்டிய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் விவரம் இதோ

Eng
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.

ire-2

அதன் பின்னர் விளையாடிய அயர்லாந்து 207 ரன்கள் எடுத்தது. பிறகு 122 ரன்கள் எடுத்த பின்தங்கிய நிலையில் விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 303 ரன்கள் குவித்தது இதன்மூலம் அயர்லாந்துக்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் என்ற கனவுடன் ஆடியது. ஆனால் அந்த கனவை இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் அயர்லாந்து அணி வெறும் 15.4 அவர்கள் 38 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

Woakes

டெஸ்ட் வரலாற்றில் ஏழாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதன் மூலம் இங்கிலாந்து அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. க்றிஸ் வோக்ஸ் 6 விக்கெட்டுக்களையும், பிராட் 4 விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement