உலக சாம்பியனான இங்கிலாந்தை டெஸ்ட் போட்டியில் முதல் நாளிலே ஊதிதள்ளிய அயர்லாந்து – விவரம் இதோ

ire-2
- Advertisement -

இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்ற பிறகு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக இன்று விளையாடி வருகிறது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

ire-1

- Advertisement -

நான்கு நாட்கள் மட்டுமே நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க காரர்கள் பர்ன்ஸ் 6 ரன்களும், ராய் 5 ரன்களும் எடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதன் பிறகு வந்த அனைவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து இங்கிலாந்து அணி 23.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து வெறும் 85 ரன்களை மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலக சாம்பியனான இங்கிலாந்து அணி கத்துக்குட்டி அணியான அயர்லாந்து அணியிடம் தடுமாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ire

தற்போது முதல் இன்னிங்சை ஆடி வரும் அயர்லாந்து அணி 25 ஓவர்கள் முடிவில் 85 ரன்கள் குவித்துள்ளது. மேலும்,2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அடிக்கும் ஒவ்வொரு ரன்களும் அயர்லாந்து அணி பெரிய ரன்களை முதல் இன்னிங்சில் குவிக்க உதவும் என்றும், மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement