போட்டியை நடத்த பணம் இல்லாததால் சர்வதேச போட்டியை கேன்சல் செய்த அணி – உதவிக்கரம் நீட்டாத ஐ.சி.சி

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் கிரிக்கெட் போட்டிகளை அதிக அளவில் நடத்திவருகின்றனர். ஏனெனில் இந்த மூன்று நாடுகளுக்கும் உள்ள கிரிக்கெட் வாரியம் மிக பண பலம் பொருந்தியதாகவும், வருமானம் ஈட்டும் நாடுகளாக கிரிக்கட் விளையாட்டில் பார்க்கப்படுவதால் அதிக அளவில் போட்டிகளை நடத்தி வருகின்றன. ஆனால் போட்டியை நடத்த பணமில்லாமல் போட்டியை கேன்சல் செய்த அணியை பற்றிய கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ?

Ireland 1

இப்போது அப்படிப்பட்ட ஒரு நிலைமை தான் தற்போது அயர்லாந்து கிரிக்கெட் அணி இன்று சந்தித்துள்ளது. நிதி பற்றாக்குறையினால் வங்கதேசத்திற்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியை டி20 போட்டியாகவும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் அயர்லாந்து அணி கேன்சல் செய்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுடன் சேர்ந்து அயர்லாந்து அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது ஐசிசி. ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்க வில்லை இதனால் அந்த அணி போட்டியை நடத்துவதற்கே கடும் பண நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த தொடர் ரத்து செய்யப்பட்டது குறித்து அயர்லாந்து தலைமை நிர்வாகி கூறுகையில் : ஐசிசி நிதி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இல்லை.

Ireland

டெஸ்ட் கிரிக்கெட் நடத்துவதற்கு வலுவான அணியை உருவாக்க வேண்டும் அப்படி வலுவான அணியை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற நிறைய முதலீடு தேவைப்படும். டெஸ்ட் போட்டிகளை நடத்துவது சாதாரணம் கிடையாது. அதற்கான நிதி ஆதாரங்கள் போதிய அளவில் இல்லை. அதனால் உள்நாட்டு தொடர்களை குறைக்கவும், ரத்து செய்யவும் நேரிடுகிறது.

- Advertisement -

Ireland 2

இங்கு ஒரு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் 10 லட்சம் யூரோக்கள் தேவைப்படும். ஆனால் அந்த அளவு பணத்தை எங்களால் திரட்ட சக்தி இல்லை. சில மாதங்களுக்கு முன்பு ஜிம்பாப்வே கிரிக்கெட் அழிவுப்பாதையை நோக்கி செல்ல தற்போது அயர்லாந்து கிரிக்கெட்டும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். இதன்மூலம் கிரிக்கெட்டில் இருந்து அயர்லாந்து அழிந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.