வெஸ்ட் இண்டீஸ் அணிக்கா இப்படி நிலைமை வரணும் – ஐயர்லாந்து அணி செய்த சிறப்பான சம்பவம்

IRE-1
- Advertisement -

பால் ஸ்டெர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேளையில் நேற்று சபீனா பார்க் மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

wivsire

- Advertisement -

இந்த போட்டியில் பலம்வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக அயர்லாந்து அணியை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களை கூட முழுவதுமாக விளையாடாமல் 48 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதிலும் குறிப்பாக டாப் பார்டர் பேட்ஸ்மேன்களில் யாருமே பெரிய அளவில் ரன் குவிக்காத வேளையில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடத்தில் இறங்கிய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே வெஸ்ட் இண்டீஸ் அணி ஓரளவு டீசன்ட்டான ரன் குவிப்பை நோக்கி நகர்ந்தது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷெப்பர்டு 41 பந்துகளில் 50 ரன்களையும், ஓடியன் ஸ்மித் 19 பந்துகளில் 46 ரன்களையும் குவிக்கவே பங்களாதேஷ் அணி 200 ரன்களை கடந்தது.

ire

இல்லையெனில் அதற்கும் குறைவான ரன்களில் ஆட்டம் இழந்திருக்கும். இறுதியில் 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் மட்டுமே குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணியானது தங்களது இன்னிங்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் மழை குறுக்கீடு செய்ததன் காரணமாக போட்டியின் இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.சி.சி பவுலர்கள் தரவரிசை : 2 ஆம் இடம்பிடித்த தமிழக வீரர் அஷ்வின் – அதுலயும் ஒரு ஸ்பெஷல் இருக்கு

அதன்படி 36 ஓவர்களில் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை எதிர்கொண்டு விளையாடிய ஐயர்லாந்து அணி 32.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 168 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எப்படி இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எப்படி ஒரு நிலையா என்று ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement