ஐபிஎல் தொடர் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு நடுவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தனித்தனி ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு, ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனி ஹோட்டல் அறையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு உயிர்பாதுகாப்பு வளையம் என்ற ஒரு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குள் பல்வேறு விதிமுறைகள் இருக்கிறது. இந்த மருத்துவ பாதுகாப்பு வட்டத்திற்குள் தான் அனைவரும் இருக்க வேண்டும்.
இங்கு வருவதற்கு முன்னரே 14 நாட்கள் ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டார்கள். தற்போது வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் இந்த மருத்துவ பாதுகாப்பு விதிகளை மீறிக் கொண்டே இருப்பதாக பிசிசிஐக்கு புகார்கள் வந்த நிலையில் இருக்கின்றன.
இதன் காரணமாக மீண்டும் இதே வழிமுறைகள் புதுப்பிக்கப்பட்டு கட்டமைக்கபட்டுள்ளது. வீரர்கள் அனுமதியின்றி வெளியாட்களை சந்தித்தால் ஆறு நாட்கள் தனிமை முகாமிற்கு அனுப்பப்படுவார்கள்.
இதே போன்று இரண்டாவது முறை தவறு செய்தால் ஒரு போட்டியில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப்படும். இந்த தவறுகள் தொடரும் பட்சத்தில், ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்களுக்கான மாற்று வீரரும் அந்த அணி எடுக்க முடியாது என்று பிசிசிஐ அறிவித்துவிட்டது.
மேலும் வீரர்களுக்கும் அணி நிர்வாகிகளுக்கும் கொடுக்கப்படும் ஜிபிஎஸ் கருவியை அணியாமல் இருந்தாலும், வைரஸ் பரிசோதனைக்கு காலதாமதமாக சென்றாலும் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் பொருந்தும் குடும்பத்தினர், வீரர் என அனைவருக்கும் பொருந்தும். ஐந்து நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு வீரரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வெளியாட்களை சந்திக்க வீரர்களை அணி நிர்வாகம் அனுமதித்தால், அந்த செயலை பொறுத்து ஒரு கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். இரண்டாவது முறை இதே தவறு நடைபெற்றால் இரண்டு புள்ளிகள் குறைக்கப்படும். மூன்றாவது முறை தவறு செய்யும் பட்சத்தில் 4 புள்ளிகள் குறைக்கப்படும். இந்த விதிமுறைகள் சரியாக கடைபிடிக்க பிசிசிஐ ஒரு குழுவை அமைத்து இருக்கிறது. அப்படி எந்த அணியும் இதனை சரியாக செய்யவில்லை என்றால் அந்த அணி தொடரில் இருந்து தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.