சர்ச்சைக்கு உள்ளாகும் அம்பயர்களின் தொடர் தவறுகள். இதற்கு என்னதான் முடிவு – ஐ.பி.எல் தொடரில் ஏற்பட்டுள்ள குழப்பம்

Umpire
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில வருடங்களாக அம்பயர்களிடமிருந்து மோசமான மிக தவறான தீர்ப்புகளே வந்துகொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடர்களில் கடந்த 4-5 வருடங்களாக களத்தில் நிற்கும் நடுவர்கள் மோசமானவர்கள் பலவற்றைச் செய்து வருகின்றனர்.
நடுவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளால் பல போட்டிகள் அப்படியே எதிரணிகளை மாறி இருக்கின்றன.

Umpire

- Advertisement -

இந்த வருடமும் இப்படித்தான் யாரும் எதிர்பாராத வகையில் மோசமான பல தீர்ப்புகளை கொடுத்து கிரிக்கெட் உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாகி கொண்டிருக்கின்றனர். வழக்கமாக ஒரு காலத்தில் எல்லாம் நடுவர்களால் துல்லியமாக கணிக்க முடியாத ரன் அவுட் போன்ற விஷயங்களுக்காக மட்டுமே மூன்றாவது நடுவர்களை கள நடுவர்கள் அணுகுவார்கள் அப்போதுதான் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

ஆனால், இந்த வருட ஐபிஎல் தொடரில் எதற்கெடுத்தாலும் மூன்றாவது நடு வரை அணுகி விடுகிறார்கள். கள நடுவர்கள் இப்படித்தான் இந்த வருட ஐபிஎல் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி பந்து வீசி கொண்டிருந்தது.

Umpire

அப்போது பேட்ஸ்மேன் அவுட் என தீர்ப்பளித்து அதன் பின்னர் வேண்டுமென்றே மூன்றாவது நடுவரிடம் சென்று அவுட் இல்லை என்று அந்த கள நடுவர் தீர்ப்பளித்தார் இது ஒரு மோசமான சம்பவமாக பார்க்கப்பட்டது..

umpire

இப்படித்தான் ஒவ்வொரு முடிவிற்கும் கள நடுவர்கள் தங்களையே தாங்கள் சந்தேகப்பட்டு ஐபிஎல் தொடரின் தரத்தை குறைத்து வருகிறார்கள். ஒரு சில தவறுகள் ஏற்படுவது தான். ஆனால், எத்தனை தவறுகள் எல்லாம் நடக்கக்கூடாது வருங்காலத்தில் முழுமையாக கள நடுவர்கள் நீக்கிவிட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Advertisement