கோலி சொன்னதை அப்படியே செய்தேன்…உண்மை உடைத்த உமேஷ் யாதவ் – விவரம் உள்ளே

நேற்று பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது. நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற கோலி பவுலிங்கை தேர்வுசெய்தார்.

yadhav

கே.எல்.ராகுலும்,அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடத் தொடங்கினர்.பஞ்சாப் அணி 3ஓவர்களில் 32ரன்களை எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் நான்காவது ஓவரை வீச வந்தார்.தான் வீசிய முதல் ஓவரிலேயே முக்கிய வீரர்களான அகர்வால்,பின்ச் மற்றும் யுவராஜ்சிங் ஆகியோரின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியின் பேட்டிங் லைனை நிலைகுலைய செய்தார்.

பின்னர் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த கே.எல்.ராகுலும் பெவிலியன் திரும்ப பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்களை பறிகொடுக்க சிறப்பான தொடக்கத்துடன் ஆட்டத்தை தொடங்கிய பஞ்சாப் 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

உமேஷ்யாதவ் வீசிய நான்காவது ஓவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.பின்னர் 156ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அபாரமாக பந்துவீசி ஒரே ஓவரில் மூன்று முக்கிய விக்கெட்களை சாய்த்த உமேஷ்யாதவ் தேர்வுசெய்யப்பட்டார்.

- Advertisement -

ஆட்டநாயகன் விருதுபெற்றபின்னர் பேசிய உமேஷ்யாதவ் “பெங்களூரு பிட்ச் வேகம் குறைந்தது. அதேவேளையில் கொல்கத்தா பிட்ச் வேகமானது. எனவே பயிற்சியாளரும், எங்கள் அணியின் கேப்டனுமான கோலி சொன்னது போல ஸ்டம்பை நோக்கி வேகமாக வீசினேன். அதற்கு பலனாக ஒரே ஓவரில் மூன்று விக்கெட்களை சாய்க்க முடிந்தது. எங்கள் அணியின் பயிற்சியாளரும், கேப்டனும் என்னை பிரீயாக விட்டுவிட்டனர். இந்த போட்டியில் யுவராஜ்சிங் விக்கெட்டை வீழ்த்தியபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்” என்றார்.