ஐ.பி.எல் கோப்பையில் எழுதப்பட்டிருக்கும் இந்த சம்ஸ்கிருத வார்த்தையின் அர்த்தம் என்ன தெரியமா ? – விவரம் இதோ

IPL-Trophy

ஐபிஎல் தொடர் இந்தியாவில் 13 வருடங்களாக நடைபெற்று வருகிறது. கால்பந்து தொடரைப் போன்று உருவாக்கப்பட்ட இந்த தொடர் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடராக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு வெற்றியாளரை நிர்ணயம் செய்ய மொத்தம் 60 போட்டிகள் நடைபெறும்.

mi

லீக் மற்றும் நாக்-அவுட் என இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற இந்த தொடரினை இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி சென்றுவிட்டது. மொத்தம் ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்த கோப்பையில் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. இந்த கோப்பையை வெல்லும் அணிக்கு 20 கோடி பரிசாக கொடுக்கப்படும்.

இரண்டாவதாக வந்த அணிக்கு 12.5 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக கொடுக்கப்படும். அதுதவிர மிகச் சிறப்பாக விளையாடும் பந்து வீச்சாளர், பேட்ஸ்மேன், இளம் வீரர், அதிக சிக்சர் அடித்த வீரர் என பல விருதுகள் அறிவிக்கப்படும். ஆனால் இந்த கோப்பையில் பலரும் புரிந்து கொள்ளாத, புரிந்துகொள்ளமுடியாத, பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியில் ஒரு சொற்றொடர் எழுதப்பட்டிருக்கிறது.

ipl trophy

“Yatra Pratibha Avsara Prapnotihi” என சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் இந்த சொற்றொடர் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன. 22 அட்டவணை மொழிகள் இருக்கின்றன. இவற்றை அனைத்தும் விட்டுவிட்டு பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியில் ஏன் பொறிக்க வேண்டும் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

- Advertisement -

Rohith

அல்லது கோப்பை வெல்லும் அந்த அணியின் மாநில மொழியில் அந்த எழுத்துக்களை பொறித்து கொடுத்திருக்கலாம் என்ற ஆலோசனையும் தொடர்ந்து சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் “Yatra Pratibha Avsara Prapnotihi” இப்படி பொறிக்கப்பட்டிருக்கும் சொற்றொடருக்கு ‘திறமையும் வாய்ப்பும் சங்கமிக்கின்றன இடம்’ என்பது பொருள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.