ஐ.பி.எல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய 5 பந்துவீச்சாளர்கள் – லிஸ்ட் இதோ

ஐபிஎல் தொடரில் பல பந்து வீச்சாளர்கள் விளையாடியுள்ளனர். இருந்தாலும் ஒரு சில பந்துவீச்சாளர்களை வருடா வருடம் ஜொலித்து வருகின்றனர் அப்படி தங்களது அணிக்காக பிரமாண்டமாக விளையாடிய பந்து வீச்சாளர்களின் பட்டியல்

boult

டிரென்ட் போல்ட் :

டெல்லி கேப்பிடல் இவர் நியூசிலாந்து அணியை சேர்ந்தவர். 2018 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல் சார்பாக பட்டையை கிளப்பினார். அந்த தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கடந்த சீசனிலும் சிறப்பாக விளையாடிய இவர் இந்தாண்டு மும்பை அணிக்காக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

siddharth

சித்தார்த் கௌல் :

- Advertisement -

இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்தவர். தற்போது 27 வயதாகிறது. இந்திய அணிக்காக விளையாட விட்டாலும் உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடியவர். 2018 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான 8 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Umesh

உமேஷ் யாதவ் :

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் எவ்வளவு ரன் கொடுத்தாலும் தனது வேகத்தை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார். இவர் 8 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பந்துவீச்சில் ஆர்.சி.பி அணிக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இவர்தான்

Markande

மயாங்க் மார்கண்டே :

இவர்சுழற் பந்து வீச்சாளர் ஆவார். முதன்முதலாக 2018ஆம் ஆண்டு அறிமுகமான 20 வயதிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தாண்டும் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

rashid-khan

ரஷித் கான் :

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் இவர். டி20 போட்டிகளுக்கு என்று தன்னை உருவாக்கிக் வைத்திருக்கிறார். தற்போது 20 வயது ஆகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு ஆண்டு 10 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்தாண்டும் தனது மாயாஜாலத்தை காட்ட இருக்கிறார்.