உலக அளவில் நம்பர் ஒன் தொடராக ஐபிஎல் – ஆங்கிலேயர்களை முந்தி இந்தியா பெருமைபடும் சாதனை

IPL vs EPL
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் கடந்த மார்ச் 26 முதல் மே 29-ஆம் தேதி வரை வெற்றிகரமாக 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்வித்து நிறைபெற்றது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் விளையாடியதால் கடந்த சீசன்களை விட கோப்பையை வெல்வதற்கு இருமடங்கு கடும் போட்டி காணப்பட்டது. அதில் கேப்டன்ஷிப் அனுபமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அபாரமாக செயல்பட்டு தனது முதல் வருடத்திலேயே சொந்த மண்ணில் கோப்பையை வென்றது. இந்த வருடமும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களின் நகங்களை கடிக்க வைத்து எதிர்பாராத திருப்பங்களை கொடுத்து த்ரில்லர் தருணங்களை விருந்தாக படைத்தது.

அதனால் அடுத்த வருட ஐபிஎல் தொடர் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமையில் ஐபிஎல் தொடரை மைதானத்திற்கு வந்து பார்க்க முடியாத ரசிகர்களுக்கு தொலைக்காட்சி மற்றும் மொபைல் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பி விருந்து படைத்து வந்த ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமம் இந்த வருடத்துடன் முடிவடைந்தது.

- Advertisement -

ஒளிபரப்பு ஏலம்:
அதை தொடர்ந்து 2023 – 2027 ஆகிய கால கட்டத்திற்கான ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமத்திற்கான ஏலத்தை மின்னணு முறையில் நடத்த உள்ளதாக கடந்த மாதம் அறிவித்த பிசிசிஐ அதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது. அந்த நிலைமையில் மும்பையில் கடந்த ஜூன் 12இல் துவங்கிய இந்த ஒளிபரப்பு ஏலத்தின் முதல் நாளில் சோனி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ரிலையன்ஸ் வியாகாம் போன்ற நிறுவனங்கள் ஒளிபரப்பு உரிமையை வாங்குவதற்கு கடும் போட்டியிட்டன. அதனால் முதல் நாளை கடந்து நேற்றைய 2-வது நாளும் தொடர்ந்து கடும் போட்டியுடன் ஏலம் நடைபெற்றது.

1. அதன் முடிவில் இந்த ஏலத்தின் முதன்மை ஒளிபரப்பு ஒப்பந்தமான இந்திய துணை கண்ட நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஏற்கனவே ஒளிபரப்பி வந்த டிஸ்னி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் குழுமம் மீண்டும் 23,575 கோடிகள் என்ற பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

- Advertisement -

2. அதேபோல் இந்திய துணைக்கண்ட நாடுகளின் டிஜிட்டல் (ஆன்லைன் மற்றும் மொபைல்) ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ் வியாகாம்18 நிறுவனம் 20,500 கோடிகளுக்கு வாங்கியுள்ளது.

3. இப்படி தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை வெவ்வேறு நிறுவனங்கள் வாங்குவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் ஐபிஎல் 2023 – 2027 சீசன்களில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமை மொத்தம் 44,075 கோடிகள் என்ற பிரமாண்ட தொகைக்கு ஏலம் போயுள்ளது. கடந்த 2018இல் இது 16347 கோடிகளுக்கு மட்டுமே ஏலம் போயிருந்தது.

- Advertisement -

4. இதனால் கடந்த காலத்தை விட இந்த வருடம் பிசிசிஐக்கு மும்மடங்கு லாபம் கிடைத்துள்ளது. மேலும் மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு சீசனுக்கு குறைந்தது 74 போட்டிகள் என்ற அடிப்படையில் 370 போட்டிகள் நடைபெறும் என்று ஏலதாரர்களுக்கு பிசிசிஐ உறுதி அளித்துள்ளது. இது 410 போட்டிகள் (சீசனுக்கு 74, 84, 94 என விரிவுபடுத்துதல்) வரை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

5. இதுபோக உலகின் இதர பகுதிகளில் ஒளிபரப்பு உரிமம் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் அல்லாத தருணங்களின் உரிம ஏளம் இன்றைய 3-வது நாளில் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது முடிந்ததும் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு பிசிசிஐ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆங்கிலேயேரை முந்திய இந்தியா:
இருப்பினும் இந்த ஏலத்தின் முதன்மை உரிமங்களான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமமங்களின் வாயிலாக 44,075 கோடிகளை பெற்றுள்ள பிசிசிஐ தற்போது அதிகாரப்பூர்வமாக உலகிலேயே நம்பர் ஒன் பணக்காரர் கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஏன் சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசியை விட பிசிசிஐ தான் தற்போது பணக்கார வாரியமாகும்.

மேலும் இந்த ஐபிஎல் தொடரின் வாயிலாக ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் போன்ற இதர டி20 தொடர்களைக் காட்டிலும் ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பையை காட்டிலும் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடராக ஐபிஎல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதைவிட தற்போது ஏலம் போயுள்ள மீடியா உரிமத்தின் அடிப்படையில் ஒரு ஐபிஎல் போட்டியின் மதிப்பு 107.5 கோடியாகும். இதன் வாயிலாக உலக அளவில் நடைபெற்றுவரும் அனைத்து விளையாட்டு தொடர்களில் இங்கிலாந்தின் பிரபல கால்பந்து பிரீமியர் லீக் தொடரான ஈபிஎல், பேஷ்பால் தொடரான எம்எல்பி, அமெரிக்காவின் கூடைப்பந்து தொடரான எம்பிஏ ஆகிய விளையாட்டு தொடர்களை முந்தியுள்ள ஐபிஎல் உலகின் நம்பர் 2 விளையாட்டு தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த பட்டியல் இதோ (ஒரு போட்டியின் மதிப்பு பட்டியல்):
1. என்எப்எல் : 132 கோடி
2. ஐபிஎல் : 107.5 கோடி
3. ஈபிஎல் : 85 கோடி
4. எம்எல்பி : 85 கோடி
5. என்பிஏ : 15 கோடி

இதையும் படிங்க : IND vs RSA : அதுலயே சொதப்புவாரு. இதுல சொல்லவா வேணும் ! ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் பற்றி முன்னாள் வீரர் அதிருப்தி

இதிலிருந்து ஆங்கிலேயர்களின் பிரதான விளையாட்டு தொடரான ஈபிஎல் தொடரை இந்தியா முந்தியுள்ளது. ஒரு காலத்தில் இந்தியர்களை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்களை பின்தள்ளும் அளவுக்கு ஐபிஎல் தொடர் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது உண்மையாகவே ஒவ்வொரு இந்திய ரசிகனும் பெருமைப்பட வேண்டிய அம்சமாகும்.

Advertisement