ஐ.பி.எல் போட்டிகளில் அணி மாற்றத்திற்கு பிறகு பின்னி எடுத்த வீரர்களை பற்றி தெரியுமா ? – விவரம் இதோ

ஐபிஎல் கிரிக்கெட் லீக் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களின் அபிமானத்தை பெற்று ஆண்டுக்காண்டு அதன் வரவேற்பு பெருகிக்கொண்டே இருக்கிறது. இந்த தொடர் இதுவரை இந்தியாவில் வெற்றிகரமாக 12 சீசன்கள் முடிவடைந்து 13 ஆவது சீசன் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்க இருந்தது. ஆனால் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால் இருமுறை தள்ளிவைக்கப்பட்ட இந்த தொடர் இந்தாண்டு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்ட்டு உள்ளது.

Ipl cup

இந்த ஐ.பி.எல் தொடரில் வருடாவருடம் வீரர்களின் அணிமாற்றம் இருக்கும். ஒரு அணியில் சரியாக விளையாடாத வீரர் எந்த ஒரு காரணமும் இன்றி அவர் அந்த அணியில் கழட்டிவிடப்படலாம். அதே நேரத்தில் வேறு ஒரு அணிக்காகவும் அவர்க விளையாடலாம். இப்படி ஒரு கட்டமைப்பு ஐபிஎல் தொடரில் இருக்கிறது. இது பல வீரர்களுக்கு உதவியுள்ளது, உபத்திரமும் செய்துள்ளது. மேலும் வீரர்களை அடுத்தகட்டத்திற்கும் நகர்த்தியுள்ளது.

ரோகித்சர்மா, தினேஷ் கார்த்திக் ,ஆந்த்ரே ரசல், ஏபி டிவில்லியர்ஸ், கேஎல் ராகுல், ராபின் உத்தப்பா போன்ற பல வீரர்கள் தங்களது முதல் அணியில் சரியாக விளையாடாமல் இரண்டாவது அணியில் பட்டையை கிளப்பிய கதைகளும் உள்ளது. அப்படிப்பட்ட வீரர்களை தற்போது காண்போம்.

Russell

ஆன்ரே ரஸல் :

- Advertisement -

காட்டடியில் பொளந்து கட்டும் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதன் முதலில் ஐபிஎல் தொடரில் களமிறங்கினார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். ஆனால் அங்கு பெரிதாக சாதிக்க முடியவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி வரை ஏலம் எடுத்தது .அடுத்த வருடமே அற்புதமாக விளையாடினார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 15 விக்கெட்டுகள் கைப்பற்றியதோடு 326 ரன்கள் குவித்தார். பின்னர் அதற்கு அடுத்த வருடமும் 15 விக்கெட் கைப்பற்றினார். 2019 ஆம் ஆண்டில் 14 போட்டிகளில் விளையாடி 510 ரன்களும் 16 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

Rahul

கேஎல் ராகுல் :

இவர் தனது இளம் வயதில் 2013ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த வருடம் ஐந்து போட்டிகளில் விளையாடி வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதற்கு அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இரண்டு வருடம் ஆடினார். அங்கும் சரியாக விளையாடவில்லை. 2016ஆம் ஆண்டு மீண்டும் பெங்களூரு அணிக்கு திரும்பினார். அந்த வருடம் 14 போட்டிகளில் 391 ரன்கள் எடுத்து அந்த அணி இறுதிப் போட்டிக்கும் சென்றது. அதன் பின்னர் அவர் கழற்றி விடப்பட்டார். 2018 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு சென்ற அவர், தொடர்ந்து 469 ரன்கள் விளாசினார். 2019ஆம் ஆண்டு 593 ரன்கள் அடித்து நொறுக்கினார்.

Uthappa

ராபின் உத்தப்பா :

முதன் முதலில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடினார். அதன்பின்னர் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காகவும், 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை புனே வாரியர்ஸ் அணிக்காகவும் விளையாடினார். 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு இவர் செல்ல அந்த அணி கோப்பையை கைப்பற்றியது. ஐந்து வருடங்களாக கொல்கத்தா அணி விளையாடிய 1700 ரன்கள் விளாசியுள்ளார். இந்நிலையில் இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.

warner

டேவிட் வார்னர் :

இவர் 2009 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு அறிமுகமாகி விளையாடினார். அப்போது 7 ஆட்டத்தில் ஆடி வெறும் 163 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாறி 2015, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். மேலும் 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரில் முதன்முதலில் கோப்பையை வெல்லவும் இவர் உதவினார்.