2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல் முதல் போட்டிக்கான தேதி அறிவிப்பு – விவரம் இதோ

Ipl cup
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களின் பேராதரவோடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருட ஐபிஎல் தொடர் 13 ஆவது சீசன் கோலாகலமாக ஆரம்பிக்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் மிகப்பெரிய தொடராக நடைபெறும் இந்த ஐபிஎல் திருவிழா ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும்.

csk-vs-mi

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி எங்கு யாருக்கிடையே நடைபெற இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 29ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் முதல் போட்டி நடைபெற இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முழுப்போட்டிகளின் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் என்று கூறப்படுகிறது.

Watson-2

ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. அதனால் மும்பையில் துவக்க போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் இறுதிகட்டத்தில் கோப்பையை தவறவிட்ட சென்னை அணி இந்த வருடம் கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement