திட்டமிட்டபடி ஐ.பி.எல் தொடர் துவங்குவதில் சிக்கல். என்ன செய்யப்போகிறார் கங்குலி ? – விவரம் இதோ : IPL 2020

Ipl cup

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ரசிகர்களின் பேராதரவோடு தற்போது பதிமூன்றாவது சீசனை எட்டியுள்ளது ஐபிஎல். இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் பெரும் வரவேற்பினை பெற்ற இந்த ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் மார்ச் 29ம் தேதி துவங்க இருந்தது.

இந்நிலையில் இந்த தொடர் திட்டமிட்டபடி துவங்குவதில் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஐபிஎல் போட்டி துவங்குவது சற்று தள்ளி போகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் அடுத்த மாதம் மார்ச் 29ம் தேதி ஐசிசியின் முக்கிய கூட்டத்திற்கு பிசிசிஐ தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கட்டாயம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் 29ம் தேதி துவக்க போட்டியில் பிசிசிஐ தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோரால் கலந்து கொள்ள முடியாது. இதனால் ஐபிஎல் தொடரின் துவக்க போட்டியை திட்டமிட்டபடி நடைபெறுமா ?என்ற கேள்வி எழுந்துள்ளது.

Ganguly

மேலும் ஐபிஎல் தொடரின் அட்டவணை ஏற்கனவே வகுக்கப்பட்டு வெளியிடப்பட இருப்பதால் அதனை மாற்றியமைப்பது சிரமமாக விடயம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த புதிய சிக்கலில் கங்குலி என்ன தீர்வு செய்ய இருக்கிறார் என்பது தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.