பயோபபுள் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வீரர்களை ரசிகர்கள் தொட்டால் என்ன நடக்கும் தெரியுமா ? – விவரம் இதோ

Kohli

14ஆவது ஐபிஎல் லீக் தொடர் இந்த ஆண்டு ஏப்ரல் ஒன்பதாம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடக்க இருக்கிறது. 50 நாட்களுக்கு மேல் நடக்க இருக்கும் தொடரில் விளையாட்டு வீரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் தொடரை நடத்த போவதாக பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை எப்படி கையாள்வது என்பது குறித்த விளக்கத்தை அனைத்து அணிகளுக்கும் பிசிசிஐ அறிக்கை வாயிலாக தகவல் அளித்துள்ளது.

csk-vs-mi

இதுவரையில் ரசிகர்கள் இல்லாமல் தொடரை நடத்தவே பிசிசிஐ திட்டமிட்டு திட்டமிட்டுள்ளது. ஒருவேளை பின்னர் ரசிகர்களை பிசிசிஐ அனுமதித்தால், அணியில் விளையாடும் வீரரை தொட முயற்சிக்கும் பட்சத்தில் ரசிகர்களுள் யாரேனும் ஒருவர் மைதானத்துக்குள் புகுந்துவிட்டால் அவரை உடனடியாக மைதானத்திற்கு வெளியே அனுப்பி விடுவோம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் அந்த ரசிகர் ஒருவேளை விளையாட்டு வீரரை தொட்டு விட்டால் , அவரது ஆடைகளை உடனடியாக அப்புறப்படுத்தி யாரும் பயன்படுத்தாத வகையில் பெட்டியில் போட்டு விடுவோம் என்றும் , மேலும் அந்த வீர தனது கைகளை 20 நொடிகளுக்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் அவ்வாறு கழுவிய பின்னரே அந்த வீரர் தனது அணியுடன் கலந்து கொள்ள இயலும் என்று அறிவித்துள்ளது.

மேலும் ரசிகர் ஏதேனும் ஒரு வீரருடைய கிரிக்கெட் பேட்டிலோ, மற்றும் ஏதேனும் ஒரு உபகரணத்திலோ ரசிகர் தொட்டு விடும் பட்சத்தில் வீரருடைய அந்த உபகரணங்கள் சானிடைஸ் செய்யப்பட்ட பின்பே வீரர்களுக்கு வழங்கப்படும் என்றும் பிசிசிஐ திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே பந்து சிக்ஸர் லைனில் சென்று விழுந்தாலே பந்து சானிடைஸ் செய்த பிறகே பவுலர்களிடம் கொடுக்கப்படுகிறது.

- Advertisement -

Kohli-fan

இந்த வருட ஐ.பி.எல் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில் பி.சி.சி.ஐ ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.