செப்டம்பர் மாதம் ஐ.பி.எல் நடந்தால் இந்த ஒரு மைதானத்தில் மட்டும் தான் போட்டிகள் நடைபெறுமாம் – பி.சி.சி.ஐ முடிவு

IPL
IPL Cup
- Advertisement -

இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மிக மிகப் பாதுகாப்பாக நடந்து கொண்டிருந்த ஐபிஎல் தொடர் தற்போது கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. தற்போதைக்கு அனைத்து வீரர்களும் அவர்களது வீட்டுக்கு செல்லலாம் என அனுமதி அளித்துள்ள பிசிசிஐ, மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் ஐபிஎல் தொடர் மறுபடியும் துவங்கலாம் என்கிற நம்பிக்கையும் தெரிவித்துள்ளது.

Rajiv-Shukla

- Advertisement -

பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வந்த செய்தியின் அடிப்படையில், தற்பொழுது அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதுவே பிசிசிஐயின் முதற்கட்ட நடவடிக்கை. அனைத்து வீரர்களும் கூடிய விரைவில் சரியாகி விட்டால் மறுபடியும் ஐபிஎல் தொடரை சில மாதங்களுக்குப் பிறகு ஒரே மைதானத்தில் வைத்து நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மும்பையில் வைத்து நடத்தி முடிக்க படலாம் என்றும் தெரியவந்துள்ளது.

மும்பையில் வைத்து நடத்தப்படும் நிலையில் அனைத்து அணைகளும், தங்களது அணியில் உள்ள வீரர்களை வைத்து விளையாடும் சூழ்நிலை ஏற்படும். எனவே நிலமை சீக்கிரமாக சரியாகும் பச்சத்தில் வெகு சீக்கிரமாக ஐபிஎல் தொடர் மீண்டும் மும்பையில் நடைபெறும்.

hetmyer

ஒருவேளை நிலைமை சரியாக அதிக நாட்கள் எடுத்துக் கொண்டால் நிச்சயம் ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதத்தில் வைத்து நடத்தி முடிக்கப்பட உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. ஜூன் மாதத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற இருப்பதாலும், அதற்குப் பின்னர் பல வெளிநாட்டு தொடர் இருப்பதாலும் ஐபிஎல் தொடரை உடனடியாக நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

எனவே பாதுகாப்பான முறையில் தற்போது நடத்த முடியவில்லை என்றால் இந்த ஆண்டு இறுதியில் ஆண்களுக்கான உலக கோப்பை டி20 தொடர் நடத்துவதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் வைத்து மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement