மீண்டும் ஐ.பி.எல் தொடர் ஸ்டார்ட் ஆக போகுது. எஞ்சியுள்ள போட்டிகளுக்கான தேதி அறிவிப்பு – வெளியான நற்செய்தி

ipl

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக காலவரையறையின்றி ரத்து செய்தது. அதனை தொடர்ந்தும் இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எஞ்சியுள்ள போட்டிகளை எங்கு நடத்தலாம் என்பது குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

IPL

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு பல்வேறு தடைகள் இருந்த போதும் தற்போது மீதியுள்ள போட்டிகளை நடத்தும் முடிவை மே 29-ஆம் தேதி பிசிசிஐ எடுக்க உள்ளதாக தெரிகிறது. அதன்படி மீதமுள்ள 31 போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்காக இங்கிலாந்து செல்ல உள்ளதால் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் இந்த ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்திய அணி முதலாவதாக நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடி விட்டு அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் உள்ளது. அதை தொடர்ந்து ஐசிசி t20 உலகக் கோப்பை தொடர் வரைக்கும் இந்திய அணிக்கு எந்த ஒரு போட்டியும் கிடையாது.

ipl

இதனால் இந்த இடைவெளியில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அக்டோபர் நவம்பர் மாதங்களில் உலக கோப்பை டி20 தொடர் நடைபெற இருப்பதால் செப்டம்பர் 15 இல் இருந்து அக்டோபர் 15 வரை ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கு ஒன்பது நாட்கள் இடைவெளி உள்ளது ஆனால் அதனை நான்கு நாட்களாக குறைக்க பிசிசிஐ இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் வலியுறுத்தும் அப்படி நாட்கள் குறைக்கப்பட்டால் நிச்சயம் செப்டம்பர் 15 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 15 ஆம் தேதி வரை இந்த தொடர் நடத்தி முடிக்கப்படும்.

- Advertisement -

Dubai

ஒரே மாதத்தில் 31 போட்டிகளையும் முடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் சனி, ஞாயிறுகளில் இரண்டு போட்டிகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்த முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement