ஐ.பி.எல் தொடரின் தற்போதைய பாயின்ட்ஸ் டேபுள். சி.எஸ்.கே பிளே ஆப் செல்லுமா ? – புள்ளி பட்டியல் இதோ

CSKShop
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 37 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

CSKvsRR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 35 ரன்களும், தோனி 28 ரன்கள் அடித்து இருந்தனர். அடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 17.3 அவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவரே தேர்வானது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சென்னை அணி பிளேஆப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது என்றே கூறலாம்.

buttler

நேற்று சிஎஸ்கே அணி பெற்ற தோல்வி இந்தத் தொடரில் அவர்களுக்கு கிடைத்த ஏழாவது (7) தோல்வியாகும். 10 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோற்றுள்ளது. இதன் காரணமாக தற்போது வரை சி.எஸ்.கே அணி 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மீதி உள்ள நான்கு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றாலும் மொத்தம் 14 புள்ளிகள்தான் கிடைக்கும்.

அதன் மூலம் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது நடக்காத காரியம். மேலும் பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை முழுவதும் மங்கி விட்டது எனவே கூறலாம். ஒருவேளை நான்கிலும் வெற்றி பெற்று மற்ற அணிகளின் கணக்கீடுகளை பொறுத்து பார்த்தாலும் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது முடியாத காரியம் என்பது மட்டும் உறுதி.

Advertisement