அடுத்த வருஷ ஐ.பி.எல் தொடரில் இது மட்டும் வேணாம் – பி.சி.சி.ஐ க்கு வேண்டுகோள் வைத்த அணியின் உரிமையாளர்கள்

IPL-1

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒவ்வொரு மூன்று ஆண்டிற்கும் ஒருமுறை வீரர்களின் மெகா ஏலம் நடைபெறும். இடைப்பட்ட ஆண்டுகளில் ஓய்வு பெற்ற மற்றும் காயமடைந்த வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை எடுப்பதற்காக சிறு ஏலம் நடைபெறும். கடந்த முறை 2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலம் நடத்தப்பட்டது.

auction-1

இந்நிலையில் அடுத்ததாக 2021ம் ஆம் ஆண்டு அடுத்து சீசனுக்கான மெகா ஏலம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் டிசம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரியில் இங்கிலாந்து பயணம் அடுத்து டெஸ்ட் தொடர் என அடுத்தடுத்து இந்திய அணி பிசியாக இருக்கிறது.

இதனால் ஐ.பி.எல் ஏலத்திற்கான நாட்கள் மிகக் குறைவாகவே இருக்கும். அதை வைத்து ஏலத்தை நடத்த முடியாது. மேலும் அது சாத்தியமில்லாத ஒன்று என தெரியவந்துள்ளது. அதனால் 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தை அடுத்த ஆண்டு 2022ஆம் ஆண்டு தள்ளி வைக்கலாம் என்று கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக் கான் உள்ளிட்ட சிலர் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

பிசிசிஐ இதனை விரைவில் பரிசீலனை செய்து அடுத்த ஐபிஎல் ஏலத்தை தள்ளிவைப்பதா ? இல்லையா ? என்பது குறித்த விவரங்களை வெளியிடும் என தெரிகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் நடை பெறவில்லை என்றால் உள்ளூர் போட்டிகளில் ஜொலித்த பல வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

- Advertisement -

அதே போன்று வெளிநாட்டு வீரர்கள் சிலரும் அதனால் பயன் இல்லாமல் போகலாம் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே பி.சி.சி.ஐ இந்த கோரிக்கையை உறுதி செய்து இறுதி முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது.