ஐபிஎல் தொடக்க விழா…6 கேப்டன்கள் மிஸ்ஸிங்…காரணம் இதுதான்

IPL2018
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க விழாவில் எல்லா கேப்டன்களும் கலந்துகொண்டு ஐபிஎல்-ஐ தொடக்கி வைப்பது வழக்கமாக நடந்துவரும் நிகழ்வு.ஆனால் இந்த வருட ஐபிஎல் தொடக்க விழாவில் சென்னை அணியின் கேப்டன் தோனியும் மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா மட்டுமே கலந்து கொள்கின்றனர். மற்ற அணி வீரர்கள் இந்த ஐபிஎல் தொடக்க விழாவில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ipl

- Advertisement -

ஐபில் தொடக்கவிழா முடிந்த அடுத்த நாளே அடுத்தடுத்த லீக் போட்டிகள் உள்ளதால் அணிகளின் கேப்டன்கள் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு பின்னர் போட்டி நடைபெறும் ஊர்களுக்கு திரும்புவது என்பது கடினமான காரியம் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கு பதிலாக தொடக்கவிழாவிற்கு ஒருநாள் முன்னதாகவே ஏப்ரல் 6ம் தேதி அனைத்து அணிகளின் கேப்டன்களையும் ஒன்றிணைத்து அவர்கள் ஐபிஎல் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வை பதிவுசெய்து அதனை தொடக்கவிழாவில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2018ipl

தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளன.

Advertisement