ஆர்டிஎம், மினி – மெகா ஏலத்துக்கு உள்ள வித்யாசம் ! ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் ரூல்ஸ் மற்றும் முழு விவரம்

ipl
- Advertisement -

உலகஅளவில் மிகவும் புகழ்பெற்ற பிரீமியர் லீக் டி20 தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் இந்த வருடம் வழக்கம் போல வரும் ஏப்ரல் – மே மாதம் நடைபெற உள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய புதிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க வர உள்ளது.

- Advertisement -

இந்த 2 அணிகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் அந்த அணிகளுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணம் ஏற்கனவே உள்ள பழைய 8 அணிகளும் முழுமையாக கலைக்கப்பட்டு இந்த வருடம் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு முன்பாக ஏற்கனவே உள்ள சென்னை, மும்பை உள்ளிட்ட பழைய 8 அணிகள் அதிகபட்சமாக தாங்கள் விரும்பும் 4 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் புதிய 2 அணிகள் அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
அதன் அடிப்படையில் சென்னை, மும்பை உள்ளிட்ட அணிகள் கடந்த டிசம்பர் மாதம் தாங்கள் விரும்பிய வீரர்களை வைத்துக் கொண்டு அவர்களின் பெயர்கள் மற்றும் சம்பளம் பற்றிய விவரங்களை ஏற்கனவே வெளியிட்டது. அந்த அணிகள் விடுவித்த எஞ்சிய வீரர்களில் இருந்து தலா 3 வீரர்களை புதிய லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் தேர்வு செய்து அதற்கான விவரங்களை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதையடுத்து ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து 1214 வீரர்கள் விண்ணப்பம் செய்திருந்தார்கள்.

ipl

அவர்களின் விண்ணப்பங்களை ஆராய்ந்த ஐபிஎல் நிர்வாகம் அதில் 590 வீரர்கள் மட்டும் தகுதியானவர்கள் என அறிவித்துள்ளது. இதையடுத்து 590 வீரர்கள் பங்குபெறும் மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு மாநகரில் நடைபெற உள்ளது. குறிப்பாக முதல் நாள் ஏலம் பிப்ரவரி 12 முற்பகல் 12 மணிக்கு துவங்க உள்ளது.

- Advertisement -

மினி ஏலம் – மெகா ஏலம் :
நிறைய ரசிகர்களுக்கு மினி ஏலம் மற்றும் மெகா ஏலத்துக்கு உண்டான வித்தியாசங்கள் தெரிவதில்லை. முதலில் மெகா ஏலம் என்பது ஒவ்வொரு 3 வருடத்துக்கு ஒருமுறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் முழுமையாக கலைக்கப்பட்டு பெரிய அளவில் நடைபெறும் ஏலமாகும். இதற்கு காரணம் என்னவெனில் ஒரு சில அணிகள் மிகச் சிறந்த வீரர்களை தேர்வு செய்து வலுவான அணியாக மாறி தொடர்ச்சியாக கோப்பைகளை வெல்லக்கூடிய அணியாக மாறிவிடும். ஆனால் ஒரு சில அணிகள் மோசமான வீரர்களை தேர்வு செய்து தடுமாறுவதுடன் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் திண்டாடும்.

IPL-bcci

எனவே அதை தடுப்பதற்காகவும் ஐபிஎல் தொடரின் ஏலம் ஒருதலைப்பட்சமாக இருக்கக் கூடாது என்பதற்காகவே 3 வருடத்துக்கு ஒருமுறை மெகா ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த மெகா ஏலம் கடந்த 2021இல் நடக்க இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டு இந்த வருடம் நடைபெற உள்ளது. அதேபோல் மினி ஏலம் என்பது மெகா ஏலத்துக்கு பின் நடைபெறும் ஐபிஎல் சீசன்களுக்கு முன்பாக “வேண்டாம் என நினைக்கும் ஒருசில வீரர்களை அந்தந்த அணி நிர்வாகங்கள் விடுவித்து கொள்ளும் வீரர்கள் மற்றும் ஒருசில புதிய வீரர்கள் பங்குபெறும் ஏலமாகும். ஒரு நாள் மட்டும் நடைபெறும் மினி ஏலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிலான வீரர்களை அனைத்து அணிகளும் வாங்கிக் கொள்ளலாம். அதேபோல் மினி ஏலம் ஒரு நாள் மட்டும் நடைபெறும். மெகா ஏலம் 2 நாட்கள் நடைபெறும் நிகழ்வாகும்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு வருடமும் வீரர்களின் பார்ம் மாறும் அல்லவா? அத்துடன் புது புது இளம் வீரர்கள் வருவார்கள் அல்லவா? எனவே அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வண்ணமாகவே இந்த ஐபிஎல் ஏலம் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது.

Faf du plessis

ஆர்டிஎம் கார்ட் :
அதேபோல் மினி ஏலங்களில் வழங்கப்படும் ஆர்டிஎம் முறை இந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. ஆர்டிஎம் என்பது தங்கள் அணிக்காக ஏற்கனவே விளையாடிய ஒரு வீரர் ஏலத்தில் அதிகபட்ச தொகையை எட்டும் போது உரிமையுடன் வாங்கும் ஒரு முறையாகும்.

- Advertisement -

எடுத்துகாட்டாக கடந்த 2021 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பப் டு பிளேஸிசை முதலில் 1.50 கோடிகளுக்கு சென்னை அணி ஏலத்தில் கேட்க அவரை 1.60 கோடிகளுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. ஆனால் ஆர்டிஎம் முறையை பயன்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை 1.60 கோடிகளுக்கு தங்கள் அணிக்கு இறுதியாக வாங்கியது.

ipl

எத்தனை வீரர்கள், எவ்வளவு கோடிகள்:
ஐபிஎல் 2022 தொடரில் ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்கள் இருக்கலாம். குறைந்தபட்சமாக 18 வீரர்கள் இருக்கலாம். அதேபோல் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பிடித்திருக்க வேண்டும். இருப்பினும் இந்த வீரர்களில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள் அல்லது விளையாடதவர்கள் என்ற பாகுபாடு கிடையாது.

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் வீரர்களை வாங்க ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக 90 கோடிகளை மட்டுமே செலவழிக்க வேண்டும். இதில் ஏற்கனவே வாங்கிய வீரர்களுக்கு செலவழித்த தொகை போக எஞ்சியுள்ள தொகையை மட்டுமே அந்த அந்த அணி நிர்வாகங்கள் ஏலத்தின் போது பயன்படுத்த வேண்டும்.

ipl trophy

வீரர்களுக்கான விதிமுறைகள்:
ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரர்களும் பின்வரும் விதிமுறைகளுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

1. ஏலத்தில் பங்கேற்க ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் குறைந்தது 1 முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே இந்தியாவுக்காக விளையாடிய வீரர்கள் என்றால் அவர்கள் ஏலத்தில் பங்கேற்க பிசிசிஐயிடம் அனுமதி பெற வேண்டும். இந்தியாவுக்காக விளையாடதவர்கள் என்றால் மாநில கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெற வேண்டும்.

3. அதேபோல் வெளிநாட்டு வீரர்கள் என்றால் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களிடம் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனுமதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Advertisement