உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ஏலம் போன ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் ! வாங்கியது யார் – 3வது நாள் வேற இருக்கு

IPL
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 முதல் மே 29-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதில் கேப்டன்ஷிப் அனுபவம் இல்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் வருடத்திலேயே லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் அசத்திய குஜராத் டைட்டன்ஸ் சொந்த மண்ணில் கோப்பை வென்று சாதனை படைத்தது. மேலும் இந்த வருடம் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு திரில்லர் விருந்து படைத்தது.

IPL 2022

- Advertisement -

அதேபோல் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் 1000 சிக்ஸர்களுக்கு மேல் அடிக்கப்பட்டதால் ஐபிஎல் தொடரை மிகவும் விரும்பிப் பார்த்த ரசிகர்கள் அடுத்த ஐபிஎல் எப்போது தொடங்கும் என்று இப்போதே காத்துக்கிடக்க துவங்கியுள்ளனர். இந்த நிலைமையில் மைதானத்திற்கு நேரில் சென்று பார்க்க முடியாத ரசிகர்களுக்கு ஐபிஎல் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பி வந்த ஸ்டார்ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் ஒப்பந்தம் இந்த வருடத்துடன் நிறைவு பெற்றது.

ஒளிபரப்பு ஏலம்:
அதை தொடர்ந்து 2023 – 2027 ஆகிய காலகட்டத்திற்கான ஒளிபரப்பு ஏலத்தை மின்னணு முறையில் நடத்த உள்ளதாக கடந்த மாதம் அறிவித்த பிசிசிஐ அதில் பங்கேற்க சம்பந்தப்பட்ட டாப் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது. அதை தொடர்ந்து மும்பையில் ஜூன் 12-ஆம் தேதி துவங்கிய இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் வியாகாம், சோனி உள்ளிட்ட பிரபல குழுமங்கள் பங்கேற்றன. இந்த ஏலமானது 4 பிரிவுகளின் கீழ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

IPL-bcci

அதாவது இந்திய துணை கண்டத்தை சேர்ந்த நாடுகளில் ஒளி பரப்புவதற்கான தொலைக்காட்சி ஒப்பந்தம், இந்திய துணை கண்டத்தை சேர்ந்த நாடுகளில் ஒளி பரப்புவதற்கான டிஜிட்டல் (மொபைல் மற்றும் ஆன்லைன்) ஒப்பந்தம், உலகின் இதர பகுதிகளில் ஒளி பரப்புவதற்கான ஒப்பந்தம் மற்றும் எக்ஸ்குளுசிவ் அல்லாத தருணங்களை ஒளிபரப்பும் ஒப்பந்தம் என 4 பிரிவுகளின் கீழ் ஏலதாதர்கள் தாங்கள் விரும்பும் பிரிவை குறிப்பிட்ட அடிப்படை தொகையில் ஏலம் கேட்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து மும்பையில் துவங்கிய இந்த ஏலத்தின் முதல் நாளில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் முதல் நாள் முடிவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் என இரண்டையும் சேர்த்து ஏலத்தொகை சுமாராக 43,000 கோடிகளை எட்டியது.

- Advertisement -

பிரமாண்ட தொகை:
அந்த நிலைமையில் ஜூன் 13இல் நடைபெற்ற இந்த ஏலத்தின் 2-வது நாளில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை மீண்டும் மொத்தமாக வாங்குவதற்கு ஸ்டார்ஸ்போர்ட்ஸ் குழுமம் கடுமையாக போட்டியிட்டது. ஆனால் இடையே ரிலையன்ஸ் வியாகாம் உள்ளே புகுந்து கடுமையான போட்டி கொடுத்தது.

IPL

1. அதன் இறுதியில் இந்த ஏலத்தின் முதன்மை ஒளிபரப்பு உரிமமான இந்திய துணைக் கண்டத்தை சேர்ந்த நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் மீண்டும் 23,575 கோடிகள் என்ற மிகப் பெரிய தொகைக்கு வெற்றிகரமாக வாங்கியது.

- Advertisement -

2. அதேபோல் இந்த ஏலத்தின் 2-வது மிகப்பெரிய ஒளிபரப்பு உரிமமாக பார்க்கப்படும் டிஜிட்டல் (மொபைல் மற்றும் ஆன்லைன்) ஒளிபரப்பு உரிமத்தை ரிலையன்ஸ் வியாகாம் நிறுவனம் 20,500 கோடி என்ற பெரிய தொகைக்கு போட்டி போட்டு வாங்கியது.

Hot-star

3. வரலாற்றில் இப்படி தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஆகிய 2 உரிமங்களை 2 வெவ்வேறு நிறுவனங்கள் வாங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் 2023 – 2027 காலகட்டத்தில் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வாயிலாக ஐபிஎல் தொடரை பார்க்க முடியும். மொபைல் மற்றும் ஆன்லைன் வாயிலாக பார்க்க வேண்டுமெனில் அதை வாங்கியுள்ள ரிலையன்ஸ் வியாகாம் குழுமத்தின் ஜியோ, வூட் போன்ற மொபைல் ஆப் வாயிலாக பார்க்க முடியும்.

- Advertisement -

4. இந்த 2 தொகையும் சேர்த்தால் 44,075 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு ஐபிஎல் 2023 – 2027 ஒளிபரப்பு ஒப்பந்தம் ஏலம் போயுள்ளது ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் குறைந்தது 370 போட்டிகள் நடைபெறும் அதாவது ஒரு சீசனுக்கு 74 போட்டிகள் நடைபெறும் என்று ஏலதாரர்களுக்கு பிசிசிஐ உறுதியளித்துள்ளது.

csk fans

5. இதனால் 2023 – 2027 காலகட்டத்தில் ஒரு ஐபிஎல் போட்டியின் மதிப்பு 107.5 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த முறை வெறும் 55 கோடியாக இருந்தது. அந்த வகையில் இந்த வருடம் பிசிசிஐக்கு மும்மடங்கு வருமானம் கிடைத்துள்ளது.

3வது நாள்:
இருப்பினும் இந்த ஏலம் இன்னும் முடியவில்லை. ஆம் ஜூன் 14இல் நடைபெறும் இந்த ஏலத்தின் 3-வது நாளில் உலகின் இதர பகுதிகளில் ஒளிபரப்புவதற்கான உரிமம் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் அல்லாத தருணங்களை ஒளிபரப்பு உரிமம் ஏலம் விடப்பட உள்ளது. அது நிறைவு பெற்றதும் எந்தெந்த நிறுவனங்கள் எந்த உரிமங்களை எவ்வளவு தொகைக்கு வாங்கியது என்று ஐபிஎல் நிர்வாகம் இந்த ஏலத்தை பற்றிய விவரத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.

Advertisement