செப்டம்பரில் துவங்கும் ஐ.பி.எல் தொடர். அதுவும் எந்த நாட்டில் தெரியுமா ? – வெளியான சூப்பர் தகவல் இதோ

ipl
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த வித கிரிக்கெட் போட்டியும் இல்லாமல் இருந்தது. தற்போது இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் மார்ச் மாதம் நடக்க வேண்டிய ஐபிஎல் தொடர் தற்போது வரை நடக்குமா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

Ipl cup

- Advertisement -

மார்ச் 29 ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை நடக்க இருந்தது. ஆனால் அதன் பின்னர் இரு முறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் குறைவாக உள்ள இலங்கை, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் ஐபிஎல் தொடரை நடத்தி வருவதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இவர்கள் யாரது கோரிக்கையையும் பி.சி.சி.ஐ ஏற்கவில்லை. எப்படியாவது இந்த வருட இறுதிக்குள் இந்தத்தொடரை நடத்தியாக வேண்டும் என்று பி.சி.சி.ஐ மும்முரமாக வேலைகளை செய்துவருகிறது. ஆனாலும் அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாததால் ரசிகர்கள் அதுகுறித்த தெளிவின்றி இருந்தனர்.

ipl-bowlers

இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரை செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று கங்குலி தலைமையிலான பிசிசிஐ ஆலோசனைக் குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் அரசல்புரசலாக வெளியாகியுள்ளது.

IPLNSG

ஏற்கனவே 2009 மற்றும் 2014ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதி ஐபிஎல் தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அப்படியே ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடந்தாலும் ரசிகர்கள் என்றி காலியான மூடிய மைதானத்தில்தான் நடக்கும் என்றும் தெரிகிறது. இதன் காரணமாக அனைவரும் வீட்டிலேயே அமர்ந்து தொலைக்காட்சியில் பார்க்க வேண்டியதுதான்.

Advertisement