ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும்..அரசியல் எதிர்ப்பை மீறி ,தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தடாலடி – கொண்டாத்தில் ரசிகர்கள் !

cicket
- Advertisement -

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடிடவும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உட்பட சில அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

bravo

அதையும் தாண்டி ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தினால் போட்டி நடைபெறும் போதே கிரிக்கெட் மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தனர்.இந்நிலையில் போராட்டாக்காரர்கள் சிலர் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரையப்பட்டிருந்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் விளம்பரங்களை அழித்துவிட்டு “எங்களுக்கு ஐபிஎல் வேண்டாம், காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்” என்கிற வார்த்தைகளை அதன்மேல் எழுதிவிட்டு சென்றனர்.

- Advertisement -

இந்நிலையில் வரும் 10-ஆம் தேதி சென்னையிலுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிடும் போட்டி நடைபெறவுள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் சென்னையில் நடைபெறும் போட்டிகளை இடம் மாற்றுவது குறித்து இன்று தமிழக மற்றும் கேரள கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

ticket

உடனடியாக சில ஊடகங்கள் சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் திருவனந்தபுரத்திற்கு மாற்றம் என தவறான செய்தியை பிரேக்கிங் நியூஸாக வெளியிட்டன.தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அந்த செய்தி முற்றிலும் தவறானது என மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும். திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட வாய்ப்பில்லை எனவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பிலும், சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பிலும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement